நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரசரட்னம் மயூரன்
வயது 3224 நவம்பர், 1986 – 13 மே, 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Essen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் பிரிவுத்துயர் செய்திக்கேட்டு ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், நேரிலும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் அவரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும்,எழுச்சி மிகு இளைஞர்களைக் கொண்டதும், புகையிலைத் தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கரணவாய் கரவெட்டியில் 24/Nov/1986 அரசரட்னம் செல்வேஸ்வரி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக மயூரன் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் பிறந்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தர்சினி, அனுசினி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் செல்வராஜா தேவநாயகி தம்பதிகளின் அன்பு மகள் சுஜிதா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சபீனா, நிவேனா, ஐசானா ஆகிய அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன் இன்பமாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் அன்புருவான இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 13.05.2019 இல் 32 வயதில் ஜேர்மனியில் உள்ள Essen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"கரணவாய் மண்ணின்
......கருணைக் கண்ணன்
காவியம் பாடவல்ல
.......காதல் வீரன்
இளமை வயதில்
.....இடையில் பிரிந்து
இனிமை வாழ்வைத்
.......துறந்தது ஏனோ"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

