1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அரசரட்ணம் சந்தானலட்சுமி
வயது 679 ஜனவரி, 1952 – 11 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- Lewisham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அரசரட்ணம் சந்தானலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா! அம்மா! அம்மா!
எங்கு சென்றீரோ!!
ஓராண்டு ஆகியும் உம்மை எண்ணி
ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்..
மீண்டும் ஒருமுறை உம் முகம் காண
கருவறையில் தொடர்ந்த நம் உறவை
காலனவன் கல்லறையில் புதைத்தாலும்
நீங்காத உம் நினைவுகளுடன்
தினந்தோறும் போராடுகிறோம்
பேச மொழி தந்தீர் வாழ வழி தந்தீர்- ஆனால்
நீங்கள் போன வழிதனை
சொல்லாது சென்றது- தினமும்
உம்மை சுவரோவியமாய் பார்பதற்கோ??
வாரும் அம்மா எம்மை பாரும்
வற்றாத நதிபோல் நம்மில் கலந்துவிடும்
எம் வாழ்வின் வழிகாட்டியாய் தினம்
இருக்க வேண்டிகின்றோம்..
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
முல்லைத்தீவில் செழிப்பு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,நெல்வயல்கள், பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், தெங்கு தோட்டம் என அழகு நிறைந்த புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரத்தில் 09-01-1952 இல் பொன்னம்பலம் செல்லமுத்து தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக சந்தானலட்சுமி அழகிய குழந்தையாக அவதரித்தார்
அன்பும் பண்பும் நிறைந்த இவர் கனகரத்தினம், சபாரத்தினம், பவானிதேவி, பாக்கியம், பவளமணி, அழகரத்தினம், மகேந்திரராசா, செல்வரத்தினம் போன்ற உடன் பிறப்புகளுடன் கூடி குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு. திருமதி குமாரசாமி தம்பதிகளின் அழகு மகன் அரசரட்ணம் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து லலிதாராணி, ஸ்ரீஅன்பரசன், சுகந்தி எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
பூமணி, மேரி என பாசமாக அழைக்கப்படும் இவர் பெறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்ததுடன், சுவையான உணவுகள் செய்வதிலும், வீட்டை சுத்தமாக வைத்திருப்பதை கடமையாக எண்ணிச் செயற்பட்டார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 11-04-2019 இல் 67 வயதில் பிரித்தானியாவில் உள்ள Lewisham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்பு மலரே
அன்னை முகமே
அணைத்து மகிழ்ந்த
ஆசை உயிரே
அன்பு உறவு ஒன்று
அகிலம் துறந்தது
அன்னை மடியின்
ஆயுள் முடிந்தது"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

