ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு21 ஜூலை, 1986
இறப்பு1 டிசம்பர், 2017
அரியதாஸ் ஜினோபன் அவர்களின் படம்

அரியதாஸ் ஜினோபன்

வயது 31, உரிமையாளர்- A.J.S Construction

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியதாஸ் ஜினோபன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவு தந்து
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா - என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?

நீ இல்லையெனும் நினைவே
நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யா கண்களில்
திரண்டிடும் நீர் கரைத்திடுமோ காயத்தை
நீங்காத உன் நினைவுகள் எமை வந்து வாட்டுது
கண் நிறைந்த உனது தோற்றம்
கனவில் வந்து வருத்துகிறதே இன்முகம் காட்டி
எம் இல்லம் சுற்றிய நாட்களை
எப்படி மறப்போமடா!

அருகினிலே இனிமையாய் நிஜமாய்
கண் உன் உருவத்தை
நிழற்படமாய் பார்க்கும்போது நெஞ்சம்
விம்மி அழுகின்றதே மகனே
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
பலநூறு உறவுகள் இருந்தென்ன

நீ பிரித்த இடைவெளியை மகனே
யார்தான் நிரப்புவாரோ
கடலின் ஆழத்தை கூடக் கண்டு விடலாம்- ஆனால்
நாம் உன்மேல் கொண்ட அன்பினை
அளந்திட முடியுமா?

காலங்கள் பல கடந்தும் கண்ணீருடன்
கண்கள் உன் நினைவுடன்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்- எங்கள்
உள்ளங்களில் நீங்காமல் நிறைந்திருப்பாய் மகனே
நீ மறைந்த நாள் முதலாய் நினைவிழந்து வாழும்
உனது உறவுகளின் கண்ணீர்த்துளிகள்

உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்....
மீளாத்துயரில் தவிக்கும் அப்பா, அம்மா,
சகோதரகள், சகோதரி

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 20 நவம்பர், 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 8 டிசம்பர், 20192ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.