ஆறுதல்

நன்றி நவிலல்

அருளானந்தம் தவமணிதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருளானந்தம் தவமணிதேவி

வயது 7424 அக்டோபர், 1944 – 10 ஜூன், 2019

பிறந்த இடம்
புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளானந்தம் தவமணிதேவி அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

காற்றோடு பூ உறவாடுவதை போல-எங்கள்
மனதோடு மனம் உறவாட நீங்கள் இல்லை அம்மா!

காற்று எத்திசையில் திக்கிமுக்கி திரிந்தாலும்
என்றும் பூவின் வாசத்தை இழக்காது!

உங்கள் பிள்ளைகள் உங்கள் வாசத்தை தவிர
வேறு சுவாசத்தை சுகிக்கமாட்டோம் அம்மா....!

என்றும் உங்கள் அன்புக்கு ஏங்கும்
பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்...

எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்களுக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை La Salle jeanne d'arc, 50 place de Torcy, 75018 Paris, France எனும் முகவரியில் மு.ப 11:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவு 1ம் வட்டாரத்தில் 24/OCT/1944 ஆம் ஆண்டில் திரு.திருமதி தர்மலிங்கம் அன்னம்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புத்திரியாக தவமணிதேவி அவர்கள் பர்வதபத்தினி, கேதாரகௌரி, பத்மாதேவி, சகுந்தலாதேவி, திருமுருகன், இரத்தினதேவி, விக்கினேஸ்வரன், புஸ்பராணி போன்றவர்களின் உடன் பிறப்பாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் திரு. திருமதி கனகரெத்தினம் பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான திரு. அருளானந்தம் அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தர்மலோஜினி, அருட்செல்வி, அருட்செல்வன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து கிருபானந்தம், சத்தியநாதன், டனிசா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து கிருசாந்தன், கௌசி, சயந்தினி, சயந்தன், சஜிந்தன், சஞ்சய், சக்தி, அஞ்சனா, அஞ்சலா, அபிராமி எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

அத்துடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரங்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.06.2019 இல் 74 வயதில் பிரான்ஸ்ஸில் உள்ள Paris நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அன்பு அம்மா உங்கள்
அழகிய பேச்சே
பண்பு உள்ளமே எங்கள்
பாச உறவே
கண்ணின் மணி போல்
காத்த உயிரே
விண்ணுலகு சென்றீரே நாங்கள்
விழிநீர் சிந்தவிட்டு"

பிற அறிவித்தல்கள்

  1. 12 ஜூன், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 28 மே, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.