மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் குணலிங்கம்
வயது 697 டிசம்பர், 1949 – 5 ஜூன், 2019
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- ஸ்ருற்காற்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குணலிங்கம் அவர்கள் 05-06-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், சட்டநாதர், காலஞ்சென்ற சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரன்(கனடா), சுபாயினி(பிரான்ஸ்), சுமதி(ஜேர்மனி), மணிமாறன்(ஜேர்மனி), சுதாமினி(ஜேர்மனி), நிசாந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபாயினி(கனடா), முகுந்தன்(பிரான்ஸ்), ஜீவசுரேன்(ஜேர்மனி), மதுரிகா(ஜேர்மனி), மைக்கல்(ஜேர்மனி), துவாரகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மனோன்மணி, தவமணி, திலகவதி, தர்மலிங்கம், காலஞ்சென்ற சிவலிங்கம், லோகலிங்கம், மகேஸ்வரி, நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார்(பிரான்ஸ்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), அருள்மணி(பிரான்ஸ்), விஜயகுமார்(இலங்கை), சுதர்சினி (இலங்கை), யுவரோகினி(சிங்கப்பூர்), வித்தியரோகினி(லண்டன்), விஜயநந்தினி, ரஞ்சன், விஜயகுமார், விஜயராணி, சுதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
வில்வராஜா(பிரான்ஸ்), வினோதினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தர்மினி(பிரான்ஸ்), தர்மநாதன்(பிரான்ஸ்), சாந்தகுமாரி(சுவிஸ்), விஜயகுமாரி(கனடா), நந்தகுமாரி(சுவிஸ்), பகீரதி(கனடா), செந்தூரன்(கனடா), தில்லைநாதன்(இலங்கை), குகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மனோகரன்(பிரான்ஸ்), மகேஸ்வரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரி(இலங்கை), நகுலேஸ்வரி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை) மற்றும் காலஞ்சென்ற வினாசித்தம்பி, காலஞ்சென்ற செல்லையா, சின்னத்துரை(இலங்கை), சாந்தநாயகி(இலங்கை), இராசாங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனாமிகா, பிரவீன், சாருஜன், சஸ்மிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த தெல்லிப்பழை கொல்லங்கலட்டியில் புகழ் பூத்த சீமான் ஆறுமுகம் அவர்தம் பாரியார் சரஸ்வதிக்கு அருமைப் புத்திரனாக 07/DEC/1949 ஆம் ஆண்டில் திரு.குணலிங்கம் அவர்கள் இவ் அழகிய பூமியில் காலஞ்சென்ற மனோன்மணி, தவமணி, திலகவதி, தர்மலிங்கம், காலஞ்சென்ற சிவலிங்கம், லோகலிங்கம், மகேஸ்வரி, நவமணி போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சகோதரர்களுடனும் சேர்ந்து விவசாய முயற்சியில் ஈடுபட்டதுடன், திரு.திருமதி சட்டநாதர் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளான சரஸ்வதியை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக கேதீஸ்வரன், சுபாயினி, சுமதி, மணிமாறன், சுதாமினி, நிசாந்தன் என்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அவர்களின் விருப்பத்தின் காரணமாக சுபாயினி, முகுந்தன், ஜீவசுரேன், மதுரிகா, மைக்கல், துவாரகா போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து அனாமிகா, பிரவீன், சாருஜன், சஸ்மிதன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நாட்டின் அசாதாரணச் சூழ்நிலை காரணமாக தாம் நேசித்த மண்ணைவிட்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்து வந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 05.06.2019 இல் 69 வயதில் ஜேர்மனியில் உள்ள Stuttgart நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
தெல்லிப்பழை தந்த
........ தென்றல் காற்றே
அல்லிப் பூப்போல்
.......அற்புத சிரிப்பே
நெல்லிக் கனி போல்
........நெஞ்சில் இனிமையுடன்
அல்லும் பகலும் கூடியிருந்து
......அகிலம் துறந்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

