2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகம் மகாலிங்கம்
Rathy Jewellers- உரிமையாளர்
வயது 6111 ஆகஸ்ட், 1953 – 1 ஜூன், 2015
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் ஆறுமுகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா! அப்பா! அப்பா! உங்களை
நெஞ்சம் நினைக்காத தினமில்லை அப்பா
உமை எண்ணி கண்ணீர் வடிக்காத நாளில்லை அப்பா!
மனிதருள் மாணிக்கமாய், புகழ்பூத்த வர்த்தகனாய்!
வழிநடந்து எமக்கு வழிகாட்டி நின்றவரே அப்பா..!
திசைமாறி நடுவழியில் விட்டு விட்டு சென்றதெங்கேயப்பா!?
நாங்கள் தேடுகின்றோம் தேடுகின்றோம் தேசமெல்லாம்மப்பா!
நடமாடும் நூலகமாய்! நன்மை சொல்லும் காவியமாய்!
புடமிட்ட பல்கலையும் தேக்கி வைத்த பெட்டகமாய்!
பிறந்தமண் மக்களுக்கு தேடி உதவி செய்தீர்!
அருள்கூட்டும் தெய்வங்கள் அத்தனைக்கும் கடன் முடித்தீர்
பணிசெய்யும் பண்பாளர் என்ற பெயர் கொண்டவரே!
கண்ணியத்தின் நன்னிதியே கற்பனையில் பொன்னிதியே!
மன்னுதமிழ் புலமையெல்லாம் மனம் நிறைய கொண்டவரே!
எங்கு சென்றீர் அப்பா! ஏங்கித் தவிக்கின்றோம் அப்பா!
ஏங்கித் தவிக்கின்றோம்!!
ஒம் சாந்தி! ஒம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
ஆறாத்துயருடன்
அருமை மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

