ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் சுப்பிரமணியம்

மணி மாமா பேக்கரி

வயது 8014 ஜூன், 1939 – 15 ஜூன், 2019

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
இணுவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு(கலாவதி கபே மன்னார்), இரத்தினம் சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகானந்தம்(சபரி பலஸ் உரிமையாளர்- பிரான்ஸ்), தர்மானந்தம்(மன்னார்), காலஞ்சென்ற அனுரானந்தம்(அனுஷா), துஷாலினி(சுவிஸ்), துஷானி, துஸ்யந்தினி, துர்ஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகந்தி(பிரான்ஸ்), சந்திரிக்கா, சுதாகர்(சுவிஸ்), விஜயநாதன், ஜோன்சன் விமல்ராஜ், கிருஷாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜீவன்(பிரான்ஸ்) , சபரீசன்(பிரான்ஸ்), அரிஷ்நவன்(பிரான்ஸ்), இமயவன், தர்சிகா, கீர்த்திகா, நாவேந்தன், லதுஜன், பிருதாயன், நிதுஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இணுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் கோவில்கள் சூழ்ந்து காணப்படும் இடமும் பிரசித்தி பெற்ற இணுவில் கந்தசாமி அருள்பாலிக்கும் பிரதேசமும், நெல்வயலும், ஆல், அரசு, வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள், பயன்தருமரங்கள் என அழகிய இணுவில் தெற்கில் 14/Jun/1939 இல் திரு.திருமதி ஆறுமுகம் செல்லாச்சி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.சுப்பிரமணியம் அவர்கள் கதிரவேலு, இரத்தினம், சோமசுந்தரம் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு திருமதி மூத்ததம்பி தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகள் இந்திராணி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து முருகானந்தம், தர்மானந்தம், அனுரானந்தம், துஷாலினி, துஷானி, துஸ்யந்தினி, துர்ஜனி போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று பண்பாக வளர்த்து சுகந்தி, சந்திரிக்கா, சுதாகர், விஜயநாதன், ஜோன்சன், விமல்ராஜ், கிருஷாந்த், போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து சுஜீவன், சபரீசன், அரிஷ்நவன், இமயவன், தர்சிகா, கீர்த்திகா, நாவேந்தன், லதுஜன், பிருதாயன், நிதுஜா எனும் அழகுப் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் மணிமாமா பேக்கரி உரிமையாளராக செயற்பட்ட இவர் கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 15.06.2019 இல் 80 வயதில் இணுவிலில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

கலைகள் நிறைந்த இணுவில் நகரம்
சிலைகள் சூழ்ந்த கோவில் இடமே
மலையாய் உயர்ந்த சைவப் பாரம்பரியத்தில்
மகவாய் பிறந்து மகிழ்ந்து வாழ்ந்து
பகலவன் போல் உலகில் ஒளியாகி
மறைந்து சென்றீர் மனதில் நிலைத்தீர்

பிற அறிவித்தல்கள்

  1. 18 ஜூலை, 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.