ஆறுதல்

நன்றி நவிலல்

ஆறுமுகம் தற்பரானந்தம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் தற்பரானந்தம்

இளைப்பாறிய சிரேஷ்ட வரி உத்தியோகத்தர்- உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

வயது 804 ஆகஸ்ட், 1938 – 8 மே, 2019

பிறந்த இடம்
சரவணை மேற்கு
வாழ்ந்த இடம்
நீர்வேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கடந்த 08-05-2019 அன்று எம்மை விட்டு பிரிந்த எமது ஆருயிர் தந்தையின் மறைவு செய்தி கேட்டு எமது துயரில் பங்குபற்றி ஆறுதல் கூறி உடனிருந்து சகல காரியங்களையும் செய்து பெரும் பங்காற்றியவர்களுக்கும், இறுதி கிரியையில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரமும், வரலாறும் வெளியிட்ட லங்காஸ்ரீ இணையதள Rip book குழுவிற்கும், அதன் வாயிலாக அஞ்சலி தெரிவித்த உறவுகளுக்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த சரவணை மேற்கில்04/AUG/1938 இல் ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளுக்கு சிரேஷ்ட புதல்வனாக தற்பரானந்தம் அவர்கள் நீலாம்பிகை, கனகரத்தினம், இராசரத்தினம், புருஷோத்தமன், நாகேஸ்வரி, பராசக்தி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன். சண்முகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் சிவபாக்கியம் அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சிவாநந்தினி, சிவகுமார், சிவதர்சினி, சிவானந்தறஜனி, சிவானந்தன், சிவரூபன் ஆகிய பிள்ளைகளை பெற்று பாதுகாத்து வளர்த்து மகிழ்வுற்று வாழ்ந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் சிரேஷ்ட வரி உத்தியோகத்தராக சேவையாற்றியதுடன் ஓய்வு நிலை பெற்றார். அன்புள்ளம் கொண்டவரான இவர் தனது பிள்ளைகளின் நண்பர்களையும் தனது பிள்ளையாக நினைத்து வாழ்ந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளை என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08.05.2019 இல் 80 வயதில் நீர்வேலியில் உள்ள தனது வீட்டில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அன்பில் சிறந்த
.......அழகு மலரே
அனைத்தையும் மறந்து
.......பண்பு காட்டி
பக்குவமாய் வளர்த்த
.....பாச உறவே
காலம் உள்ளவரை
....... மறக்காத உருவே"

பிற அறிவித்தல்கள்

  1. 10 மே, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.