ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆறுமுகம் தொண்டமான்

Leader of Ceylon Worker's Congress , Cabinet minister of livestock and rural community development

வயது 5529 மே, 1964 – 26 மே, 2020

பிறந்த இடம்
தமிழ்நாடு
வாழ்ந்த இடம்
இலங்கை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

இலங்கை சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் 26/05/2020 அன்று காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது Aruthal, IBC, தமிழ்வின் மற்றும் லங்காசிறி இணையதளங்கள்...

அன்னாரின் நினைவாக...

மலையக மக்கள் சேவகன்
அலை கடலாய் தொண்டர் கொண்டவன்
விலை போகாத வீர மறவன்
தலை கொடுத்துத் தர்மம் காத்தவன்...

தினக் கூலி உயர திறன் கொண்டு
மனம் குமிறி வாதிட்டவர்
கனவு நனவாகும் காலம் மலரும்முன்
உனது உயிர் போனதேனோ...

விழிநீர் சொரிந்திட வீதியில்
நாம் அழுது தவிக்கின்றோம்
பாவியான எங்களை விட்டு எங்கே போனீர்...

கருஞ் சிறுத்தை ஒன்று காலமானதேனோ
வரும் அழுகை வாயால் கூற வார்த்தை இல்லை
உருக் கொண்ட தேச மக்கள்
உமை எண்ணி ஏக்கமுறுவதால் - ஒருமுறை
திருமுகம் காட்டுமய்யா...

கமலக் கண்ணனே கட்டி மீசைக் காரனே
அமலத் தாமரை இதழ் கொண்டு
ஆற்றும் உரை இனி ஏது?

மக்கள் சேவகன் மண்ணில் சரிந்தான்
துக்க மிகுதியால் துடி துடிக்கின்றோம்...

உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்...

வாழ்க்கை வரலாறு

சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் மே 29, 1964 இல் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தார். இவர் முன்னாள் அமைச்சரும் தொழிற்சங்கவாதியுமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.

தமிழர்களின் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் செளமியமூர்த்தி தொண்டமான். இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களின் முகமாக திகழ்ந்தவர் அவர். அவரது பேரனான ஆறுமுகன் தொண்டமான் 1990களில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இறக்கும் வரை பதவியில் இருந்தார்.

முதற் தடவையாக 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் 2000, 2004 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். தொடர்ந்து பல்வேறு தேர்தல் வெற்றிகள் மூலமாக இலங்கை அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பதவி வகித்தவர் ஆறுமுகன் தொண்டமான். தற்போதும் தோட்ட உட்கட்ட அபிவிருத்தித் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.

அன்னார் 22 மே 2020 அன்று இரவு தனது இல்லத்தில் மாரடைப்பால் 55 வயதில் காலமானார். இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணியின் சார்பில் போட்டியிடவிருந்தார்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.