நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆறுமுகசாமி சீதேவிப்பிள்ளை
வயது 834 பிப்ரவரி, 1936 – 17 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி சீதேவிப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த புங்குடுதீவு 5ஆம் வட்டாரத்தில் 04/FEB/1936 இல் திரு.திருமதி அண்ணாமலை செல்லமுத்து தம்பதிகளுக்கு அழகுக் குழந்தையாக சீதேவிப்பிள்ளை அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சொர்ணலிங்கம், நாகம்மா, நடராசா, அன்னலட்சுமி போன்ற சகோதரங்களுடன் குறும்பு செய்து வளர்ந்து பெரியவராகியதும்,திரு.திருமதி நடராசா நாகமுத்து தம்பதிகளின் வீரம் நிறைந்த ஆண் மகனான ஆறுமுகசாமி என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் வாழ்க்கைப் பயணத்தில் வம்ச விருத்தியாக ஜெயலட்சுமி, சுபநேசராஜா(நேசன்), சிறிகந்தராஜா(சிறி) எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்தார். இவ்வாறு பிள்ளைகள் பெரியவர்களானதும் குகராஜா, பூமணி, கோசலா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தர்ஷா- கணேஸ், தனுஜா- றமேஸ், துஷ்யந்தன்- சுபாசினி, சிந்துஜா- அஜித், சுபானந், சுபாஸ்கரன்- தாட்சா, விபூஷா, காவியா போன்ற பேரப்பிள்ளைகளுடனும் யுவர்ஷிகா, கனிஸ்கா, கிஷானி, லுக்சன், வைஷ்ணவி, ஹரினி, நோலன், றித்வின் எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் கனடாவில் மகிழ்வாக வாழ்ந்ததுடன் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 17.11.2019 இல் 83 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
எங்கள் குல உறவே உங்கள் அன்பில் நித்தம் மகிழ்ந்தோம்
தங்க உயிரே தாயின் தாயே
திங்கள் நிலவே தித்திக்கும் தேனே
பங்க குணம் மனதில் இருக்காது
வாழ்ந்து உயர்ந்த வள்ளல் மனமே
வீழ்ந்தது ஏதோ விழிநீர் சொரிகிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

