ஆறுதல்

மரண அறிவித்தல்

அருணாசலம் வள்ளியம்மை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அருணாசலம் வள்ளியம்மை

வயது 8826 அக்டோபர், 1930 – 9 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
காரைநகர் இடைப்பிட்டி
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் வள்ளியம்மை அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தனபாக்கியம், யோகேஸ்வரன், சேனாதிராசன், வரதராசன், சந்திராதேவி, தவராசன், சீதாலக்‌ஷ்மி, லிங்கேஸ்வரன், தனலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சண்முகம், பொன்னம்மா, சிவகாமன், இராசம்மா, பொன்னம்பலம், பேரம்பலம், விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேந்திரம், சுந்தராம்பாள், சற்குணமலர், பராசக்தி, சுந்தரலிங்கம், விமலாதேவி, ஜெயபாலசிங்கம், கிருஸ்ணமூர்த்தி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியும்,

பொன்னம்மா, கந்தையா, நல்லதம்பி, சுப்ரமணியம், சங்கரப்பிள்ளை, நல்லம்மா, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுவேதினி, வாகிசன், நிரோஜினி, ஹரிவல்லவன், அகிலன், பகீரதன், கஜமுகன், ஜெயகரன், கோகிலப்பிரியா, தவப்பிரியா, தர்சனா, கார்த்திகா, யமுனா, தயாநிதி, செந்தூரன், டிலானி, டினோஜன், டயானந்தன், நிருதன், சிவரூபினி, கோசிலா, நிசாந்தன், ராகுலன், கோகுலன், அபிராமி, நிதாஞ்சலி,ஷாரங்கி, பிரபாகரன், பாலரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யாகவி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த காரைநகர் இடைப்பிட்டியில் 26/OCT/1930 இல் திரு.திருமதி கணபதிப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளான வள்ளியம்மை அவர்கள் நல்லதம்பி, சண்முகம், பொன்னம்மா, சிவகாமன், இராசம்மா, பொன்னம்பலம், பேரம்பலம், விசாலாட்சி எனும் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி வேலுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அழகிய ஆண் அழகான அருணாசலம் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக தனபாக்கியம், யோகேஸ்வரன், சேனாதிராசன், வரதராசன், சந்திராதேவி, தவராசன், சீதாலக்ஷ்மி, லிங்கேஸ்வரன், தனலக்ஷ்மி போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, நாகேந்திரம், சுந்தராம்பாள், சற்குணமலர், பராசக்தி, சுந்தரலிங்கம், விமலாதேவி, ஜெயபாலசிங்கம், கிருஷ்ணமூர்த்தி, தர்சினி போன்றோரை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், பழைய கதைகள் சொல்வதில் வல்லவராகவும், அன்பு பாசம் நிறைந்து காணப்படும் அழகிய உறவாக விளங்கியதுடன். அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு வாழ்ந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 09.09.2019 இல் 88 வயதில் வவுனியாவில் உள்ள கூமாங்குளத்தில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

”காரைநகர் மண்ணின் கரு விழியே
பாறை போல் வலிய மனமே
நிறைந்த மனம் கொண்டு
உதவிகள் புரிந்து
மறைந்தீரே எமைவிட்டு
மறக்காமனதுடன் தவிக்கிறோம் அம்மா”

பிற அறிவித்தல்கள்

  1. 9 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.