மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருணாசலம் முத்துலிங்கம்
ஊடகரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளர்- உதயன் பத்திரிக்கை மொழிபெயர்ப்பாளர்
வயது 763 டிசம்பர், 1942 – 20 மே, 2019
- பிறந்த இடம்
- காரைநகர் மாப்பாணவூரி
- வாழ்ந்த இடம்
- இராசாவின் தோட்டம், Aubervilliers
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் முத்துலிங்கம் அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் லக்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகங்கை அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன்(லண்டன்), சுதர்சன்(பிரான்ஸ்), ரமணன்(லண்டன்), கஜனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌசிகா, ஆரத்தி, சிவாஜினி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனபாலசிங்கம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்- நல்லூர்), காலஞ்சென்றவர்களான கந்தையா, நடராசா, சுந்தரம்மா, பார்வதிப்பிள்ளை, சிவபாக்கியம், திருநாவுக்கரசு, மாணிக்கத்தியாகராஜா, செல்லம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேல்பிள்ளை, தவமணி, பாலசுந்தரம் மற்றும் பஞ்சாச்சரம்(கடுக்கன்- நாவலர் வீதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆகாஷ், பிரதிகாஷ், அஸ்விகா, அத்வைதா, வர்ஷலி, தஷ்வின், பிரமிகா, நேமிகா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும்,கடலுணவு நெல்வயல்கள்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த காரைநகர் மாப்பாணயில்03/DEC/1942 ஆம் ஆண்டு அருணாசலம் லக்சுமி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக முத்துலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் பிறந்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தனபாலசிங்கம், கந்தையா, நடராசா, சுந்தரம்மா, பார்வதிப்பிள்ளை, சிவபாக்கியம், திருநாவுக்கரசு, மாணிக்கத்தியாகராஜா, செல்லம்மா, சரஸ்வதி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகள் சிவகங்கை என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து அரவிந்தன், சுதர்சன், ரமணன், கஜனி போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததுடன் கௌசிகா, ஆரத்தி, சிவாஜினி, சிவகுமார் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது மாமாவிற்குரிய கடமையை சிறப்பாக செய்ததுடன் ஆகாஷ், பிரதிகாஷ், அஸ்விகா, அத்வைதா, வர்ஷலி, தஷ்வின், பிரமிகா, நேமிகா ஆகிய அற்புத பிள்ளைகளின் பேரனாக கடமை செய்து இன்பமாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் பிரபல ஊடகரும்,எழுத்தாளருமாக எவ்வளவு எழுதினாலும் சலித்திடாத ஒருவர்.ஊற்று மை பேனாவினால் பக்கம் பக்கமாக எழுதும் அழகிய கையெழுத்து பார்க்க ஆவலைத்தூண்டுமாறு இருக்கும்,எந்த ஒரு நிகழ்வையும் மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் திட்டமிடலுடன் வடிவமைப்பதில் கைதேர்ந்தவராகவும், உதயன் பத்திரிகைக்காக சிங்கள பத்திரிகையில் வரும் கட்டுரைகளை அச்சொட்டாக மொழிபெயர்ப்பு செய்யும் வல்லமை கொண்டவர். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார் இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 20.05.2019 இல் 76 வயதில் பிரான்ஸில் உள்ள Aubervilliers இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
காரைநகர் மண்ணின்
......கலங்காத உள்ளமே
ஊடகப் பணியில்
.......உழைத்த செம்மலே
மொழி பெயர்ப்பில்
........ சிறந்த உறவே
தமிழ்த் தொண்டு விட்டு
......எங்கே சென்றீர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

