ஆறுதல்

நினைவஞ்சலி

ஐயாக்குட்டி நவரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஐயாக்குட்டி நவரத்தினம்

ஓய்வுபெற்ற உதவி அரசாங்க அதிபர்- செட்டிகுளம்

வயது 8517 செப்டம்பர், 1934 – 18 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
இளவாலை
வாழ்ந்த இடம்
ஓட்டுமடம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாவும் கொண்டிருந்த ஐயாக்குட்டி நவரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

அன்று எங்களது துன்பம் நீக்க
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு
கூறும் ஆறுதல் வார்த்தைகளாலும்
அனைவரையும் கவர்ந்தீரே!

நெஞ்சில் உம் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே நிலைத்து வாழ்வோமே!
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட உங்கள்
ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்......!!!

என்றும் உங்கள் நீங்காத நினைவுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

எமது தந்தையின் மறைவுச்செய்தியை கேட்டு நேரில் வந்தும், மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அனுதாபங்களை தெரிவித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.