ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலச்சந்திரன் தவமணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலச்சந்திரன் தவமணி

முன்னாள் கரைச்சி பிரதேசசபை நூலக உதவியாளர்

வயது 6114 ஜனவரி, 1958 – 11 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி, கொக்குவில் கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வதிவிடமாகவும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் தவமணி அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினராசா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன்(நெடுந்தீவு உடையாரின் பேரன்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராசேந்திரம்(ஓவசியர்) அவர்களின் அன்புப் பேத்தியும்,

வினோஜா(யாழ்ப்பாணம்), இராசேந்திரபிரசாத்(கனடா), பிரசன்னா(பெல்ஜியம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுமார்(குரு காட்வெயார் கிளிநொச்சி), நிருஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வேணுஜன், கம்சியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இந்திராதேவி(கிளிநொச்சி), விசுவலிங்கம்(கிளிநொச்சி), காலஞ்சென்ற இந்திரதாஸ், கௌரி(கிளிநொச்சி), பாலசரஸ்வதி(வவுனியா), காலஞ்சென்றவர்களான யோகராணி, சஜீக்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயகௌரி(யாழ்ப்பாணம்), சந்திரவதனி(பிரித்தானியா), காலஞ்சென்ற பாஸ்கரன், கமலாசனி(பிரித்தானியா), பால்ராஜ், கோசலாதேவி(கனடா), காலஞ்சென்ற சுந்தரேசன்(மதுரை சுரேஷ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

யசோதரன்(உளவளத்துணையாளர் கிளிநொச்சி) அவர்களின் சிறிய தாயாரும்,

பிரபாகரன்(கனடா), பார்த்தீபன்(பிரித்தானியா), மிருநாளினி(கனடா), விஷாலி, மாதங்கி, விதுர்சி(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

முரளிதரன்(நோர்வே), சுவர்ணா(பிரித்தானியா), சசிதரன், சஞ்சுதா(யாழ்ப்பாணம்), ஆதவன், ஆர்த்தி(கனடா), கருணாகரன், யாழினி, காலஞ்சென்ற பவானி, றஜீவன், றஜிந்தன்(கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில்அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும் தீவுக்கூட்டங்களில் பெரிய தீவும் கடலுணவு, கால்நடை வளர்ப்பு,மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள்,நன்கு படித்த சமுகத்தை கொண்ட மக்கள் காணப்படுவதுமான அழகு நிறைந்த தீவான நெடுந்தீவில் 14-01-1958 இல் அம்பலம் தெய்வானை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக தவமணி அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் இந்திராதேவி, விசுவலிங்கம், இந்திரதாஸ், கௌரி, பாலசரஸ்வதி,யோகராணி, சஜீக்கா போன்ற உடன் பிறப்புகளுடன் கூடி குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் இரத்தினராசா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனான பாலச்சந்திரன் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வினோஜா, இராசேந்திரபிரசாத், பிரசன்னா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார்.

இவர் பெறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், கரைச்சி பிரதேசசபை நூலக உதவியாளராக பல காலம் கடமை செய்து ஓய்வு நிலை அடைந்ததுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்ததுடன், சுவையான உணவுகள் செய்வதிலும்,வீட்டை சுத்தமாக வைத்திருப்பதை கடமையாக எண்ணிச் செயற்பட்டார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவ்வாறு பிள்ளைகளுடன் இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 11.04.2019 இல் 61 வயதில் கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியிலுள்ள வீட்டில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அன்னையே எங்கள்
அன்புத் தெய்வமே
இன்ப மொழி
இனிமையாகப் பேசி
துன்ப வேளை
துனையாக காத்து
துடிக்க விட்டுப்
பிரிந்தது ஏன்""

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 29 மார்ச், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.