மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலாம்பிகை பொன்னுத்துரை
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை- ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்
வயது 7929 செப்டம்பர், 1939 – 17 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- ஆவரங்கால், கண்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், கண்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை பொன்னுத்துரை அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை(Retired Office Assistant- Zonal Education Department, Vavuniya) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாந்தி(Assistant Regional Manager- People's Bank, Regional Head Office- Matale), சுகந்தி( Management Assistant Divisional Irrigation Engineering’s Office- Vavuniya), சண்முகதாசன்(சுவிஸ்), முருகதாஸ்(லண்டன்), ஜெயந்தி(சுவிஸ்), ஜெயதாஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம் மற்றும் பாலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தவேள்(Professor- University of Peradeniya), காலஞ்சென்ற புஷ்பராஜ்(Development Officer Kachcheri Vavuniya), மனுவெல்லா(சுவிஸ்), சுதாஜினி(லண்டன்), இந்திரஜித்(சுவிஸ்), சண்முகப்பிரியா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, செல்லம்மா, இரத்தினம், கணபதிப்பிள்ளை மற்றும் சின்னதங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
பிரபாகரன், பிரபாலினி, பாபு, காலஞ்சென்ற செல்வசுதன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
மாதுமை, ஆர்த்திகா, பவித்திரன், டொமினிக், றொமாறியோ, அனுஷ்கா, நதீஸ், அபிராமி, சிவராம், அவினாஷினி, சுஷாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த பருத்தித்துறையில் 29-07-1939 இல் கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக பாலாம்பிகை அழகிய குழந்தையாக அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், பாலேஸ்வரி போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் வாரித்தம்பி, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அழகு மகனான Retired office assistant-zonal education department, vavuniya இல் வேலை செய்த பொன்னுத்துரை என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து சாந்தி, சுகந்தி, சண்முகதாசன், முருகதாஸ், ஜெயந்தி, ஜெயதாஸ் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், ஆங்கில ஆசிரியையாக ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தில் கடமை செய்து பல மாணவர்களை ஆங்கில புலமையாளராக மாற்றி ஓய்வு நிலை அடைந்தார். குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார்.
இவ்வாறு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 17-04-2019 இல் 79 வயதில் கண்டியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அறிவின் உருவே
ஆங்கிலக் குருவே
அழகிய வதனம்
அன்பின் உருவம்
சிரித்துப் பேசி
அன்பைக் கூட்டி
சீடர் பல உருவாக்கி
சிரத்தில் உறைந்தீர்."
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

