ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலசிங்கம் பத்மசிறி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலசிங்கம் பத்மசிறி

International Finance Advisor– World Bank, an old student of Hartley College A/L 88, Ernst & Young former Employee

வயது 4917 பிப்ரவரி, 1970 – 24 மே, 2019

பிறந்த இடம்
துன்னாலை
வாழ்ந்த இடம்
சிங்கப்பூர், கம்போடியா, மியன்மார், மெல்போன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலை இந்திரன் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், கம்போடியா, மியான்மார், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் பத்மசிறி அவர்கள் 24-05-2019 வெள்ளிக்கிழமை அன்று Melbourne இல் காலமானார்.

அன்னார், வேலுப்பிள்ளை பாலசிங்கம், காலஞ்சென்ற மகேஸ்வரி பாலசிங்கம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், ராஜேஸ்வரன்(இளைப்பாறிய ஆசிரியர்- Jaffna College), காலஞ்சென்ற அமலசோதி(ராணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆன்ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,

நித்தியசிறி(Monash University), காவியன்சிறி, சமுத்திரசிறி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மங்களசிறி, நிமால்சிறி(Sydney) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரவிந்தன்(Melbourne), சுமங்கலா(லண்டன்), யசோதை சிவப்பிரியா(Sydney) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11மணிக்கு Bunurong Memorial Park, 790 Frankston - Dandenong Rd, Bangholme VIC 3175, Australia எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த துன்னாலை இந்திரன் அம்மன் கோவிலடியில் வேலுப்பிள்ளை பாலசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளுக்கு சிரேஸ்ட புதல்வனாக பத்மசிறி அவர்கள் 17/FEB/1970 இல் அழகு நிறைந்த இவ் இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மங்களசிறி, நிமால்சிறி ஆகிய உடன் பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் ஆசிரியர் ராஜேஸ்வரன் அமலசோதி தம்பதிகளின் அன்பு மகள் ஆன்ராஜி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து நித்தியசிறி(Monash university) , காவியன்சிறி, சமுத்திரசிறி போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் international Finance Advisor-world Bank, an old student of hartley college A/L 88, Ernst & young former Employee ஆக இருந்ததுடன், எப்போதும் புன்னகை முகத்துடன், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 24.05.2019 இல் 49 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள Melbourne நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"துன்னாலை மண்ணின்
......குத்து விளக்கே
துன்பம் சூழினும்
.......துவளாத உறவே
துயர் துடைக்கும்
.......இனிய உள்ளமே
துடித்துத்துடித்து அழுகிறோம்
........துயரக் கடலில் அமிழ்கிறோம்"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.