ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலசுப்பிரமணியம் பாலபாஸ்கரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலசுப்பிரமணியம் பாலபாஸ்கரன்

வயது 7129 ஏப்ரல், 1948 – 30 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
 துன்னாலை தெற்கு
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா scarborough ஐ வசிப்பிடமகாவும் கொண்ட பாலசுப்பிரமணியம் பாலபாஸ்கரன் அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து பாலசுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த அன்பு மகனும்,

தேவமனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, கல்யாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜிவ் சிறிஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மாமனாரும்,

பத்மபாஸ்கரன்(பதமன், பாலா), Dr. பாஸ்கரன், சத்தியாபாஸ்கரன், பவானி, நித்தியபாஸ்கரன்(நித்தி), காலஞ்சென்ற நந்தினி ஆகியோரின் பாசமிகு மூத்தச் சகோதரரும்,

Dr. செல்வராணி பத்மபாஸ்கரன், வசந்தா பாஸ்கரன், நாகரத்தினம் குகதாசன்(குகன்), கெளசல்யா(கோலா) நித்தியபாஸ்கரன், கனகசபை சிவாஜி, காலஞ்சென்ற Dr. சிறிரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. லவன், Dr. அர்சனா, Dr. இந்து, Dr.சிந்து, காயத்திரி, கோகுலன், ராகுலன், பாகுலன் ஆகியோரின் பெரிய தந்தையும்,

பார்த்திபன், லக்சுமி, Dr.ஜானகி, Dr. பிருந்தா, Dr.வித்தியா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Balasubramaniam Balabhaskaran was born in Thunnalai South, Karaveddy, Sri Lanka and passed away on Monday 30th September 2019 in Scarborough, Canada.

He is the eldest son of Late Mr. Thambimuthu Balasubramaniam & Late Mrs. Annaluxmy.

He is the beloved husband of Thevimanohari Balabhaskatan.

Father of Kavita Balabhaskatan, Kalyanee Sujeev.

Father-in-law of Sujeev Sriskantharajah.

He is the beloved brother of Pathmabaskaran(Pathman/Bala), Dr. Baskaran, Sathiabaskaran, Bavani,Nithiyabaskaran(Nithy), Late Nanthini.

Brother-in-law of Dr. Selvi Pathmabaskaran, Vasantha Baskaran, N Kugadason(Kugan), Kowsalya(Kola) Nithiyabaskaran, K.Sivajee(UK) and the Late Dr. Sri Ranjan.

Uncle of Parthepan, Dr. Lavan, Luxmy, Dr. Jannake, Dr. Archana, Dr. Brintha, Dr. Indu, Dr. Sindhu, Dr. Vidhiyaa, Gogulan, Gayathiri, Raekulan and Bharkulan.

This Notice is provided for all family and friends.

வாழ்க்கை வரலாறு

மாபெரும் கவிஞராகவும், தன் உற்றத்தாரால் “கவிஞர் பாஸ்கி” என்று அழைக்கப்பட்டவரும், ஒரு சிறந்த வாழ்க்கைக்கு சொந்தக்காரராகவும் விளங்கிய ”பாலசுப்பிரமணியம் பாலபாஸ்கரன்” அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என உலகிற்கு உணர்த்திய தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம் துன்னாலை தெற்கில் தம்பிமுத்து பாலசுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனாக பாலபாஸ்கரன் அவர்கள் 29/APR/1948 ஆம் ஆண்டு பிறந்தார். பத்மபாஸ்கரன், பாஸ்கரன், சத்தியாபாஸ்கரன், பவானி, நித்தியபாஸ்கரன், நந்தினி ஆகிய தனது சகோதரங்களோடு ஓடி ஆடி விளையாடி வளர்ந்த இவர், தனது பள்ளிவாழ்க்கையில் தலைசிறந்த மாணவராக விளங்கி, பிறகு பருத்தித்துறை Hartley கல்லூரியிலும், யாழ் ஸகந்தவரோதயா கல்லூரியிலும் கல்வி கற்று முடித்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

யாழ்ப்பாணத்தில் உள்ள People's bank இல் பணிபுரிய தொடங்கிய இவர், 1978 ஆம் ஆண்டு தேவிமனோகரி என்பவரைத் திருமணம் முடித்து, அதே வருடம் லண்டனிற்க்கு கணக்காளர் படிப்பை படிப்பதற்காக சென்றார். 1980 இல் இலங்கை திரும்பிய இவர், யாழ்ப்பாணத்தில் உள்ள Maharaja Organisation-இல் Manager ஆக பணிபுரிய தொடங்கியதுடன், இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்ததன் காரணமாக 1981ஆம் ஆண்டு கவிதா என்ற மகளையும், 1983 இல் கல்யாணி என்ற மகளையும் பெற்றெடுத்தார்.

நாட்டில் நிலவிய நிலைமை காரணமாக 1986-இல் Zambia-விற்கு சென்ற இவர் அங்கு Accountant-ஆக பணிபுரிய தொடங்கினார். 1991 இல் கனடாவில் உள்ள Scarborough-க்கு குடிபெயர்ந்த இவர் Ontario Crafts Council இல் பணிபுரிய ஆரம்பித்தார்.

கவிதை எழுதுவதையே தனது போழுதுபோக்காக கொண்ட காரணத்தினால், ”கவிஞர் பாஸ்கி” என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு இவரது கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, கனடாவில் உள்ள Hartley கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் “உள்ளத்து ஊற்றுக்கள்” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

கனடாவில் ரேடியோ மேடைகளில் சமூகம் சார்ந்த நல்மாற்றத்திற்கான கருத்துக்களை பரப்பி வந்த இவர், துன்னாலை மக்கள் மன்றத்தின் தலைவராக விளங்கி நல்முறையில் அதனை வழிநடத்தினார். தனது இளைய மகளை சுஜிவ் சிறிஸ்கந்தராஜா என்பவருக்கு மணமுடித்து கொடுத்தார்.

அனைத்திலும் தன்னைவிட மற்றவர்களை முன்னிறுத்தும் பண்பை இயற்கையாகவே பெற்ற இவர், தான் உழைத்து கட்டிய துன்னாலையில் உள்ள வீட்டிற்கு “அன்பாலயம்” என பெயர் சூட்டி மகிழ்ந்தார். உறவுகளுக்கு முன்மாதிரி மனிதராக விளங்கியதுடம், பழகுவதற்கு இனிமையானவராகவும், நண்பர்களிடத்தில் பரிவாகவும் இருந்து வந்தார்.

அன்பு, பாசம், நேசம், பரிவு என மனதனுக்கு தேவையான நற்குணங்களை மொத்தமாக பெற்ற இவர், தனது பாசத்திற்குரிய அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தி 30.09.2019இல் தனது 71 வயதில் இறைவனடி சேர்ந்தார்.

பிற அறிவித்தல்கள்

  1. 28 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.