ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலசுப்ரமணியம் கணபதிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலசுப்ரமணியம் கணபதிப்பிள்ளை

வயது 7320 டிசம்பர், 1945 – 6 ஜூன், 2019

பிறந்த இடம்
சரசாலை
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி சரசாலையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 06-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தேவாரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளா அவர்களின் அன்பு கணவரும்,

மதன்மோகன், கோபிரமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கீஷா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

ஸியா அவர்களின் அன்பு பேரனும்,

சிவஞானலிங்கம், இந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பத்மகாந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சாந்தகுமாரி(கனடா), காலஞ்சென்ற நிர்மலா(இலங்கை), கேதீஸ்வரன்(கனடா), விமலா(லண்டன்), கேதாரநாதன்(லண்டன்), காந்திமதி(அவுஸ்திரேலியா), நித்தியானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சுகந்தன் அவர்களின் அன்பு தாய் மாமாவும்,

யாழினி, தேவானந்த் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட சாவகச்சேரி சரசாலையில் 20/Dec/1945 ஆம் ஆண்டில் கணபதிப்பிள்ளை தேவாரத்தினம் தம்பதிகளுக்கு அன்பு மகனாக பாலசுப்பிரமணியம் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும், அழகும் நிறைந்த இவர் சிவஞானலிங்கம், இந்திரா ஆகிய உடன் பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் கந்தையா ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மகள் சியாமளா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து மதன்மோகன்,கோபிரமணன் ஆகிய பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன், பெரியவர்கள் ஆனதும் கீஷாவை திருமணம் முடித்து வைத்து ஸியா என்ற ஒரே ஒரு பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார். மேலும் தாய்நாட்டல் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தான் நேசித்த மண்ணை விட்டு கனடா சென்று குடியேறி கடினப்பட்டு உழைத்ததுடன், வாழ்வில் நற்பண்பும், ஒழுக்கமும், பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன், இரக்ககுணம் நிறைந்தவராகவும், அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளை, உற்றார், உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 06-06-2019 இல் 73 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

’’சரசாலை மண்ணின்
......சரித்திர புதல்வனே
சிரம் தாழ்த்தி
.......சிகரம் தொட்டவனே
மரம் போல்
.......மலர்கள் தூவி
அரன் போல்
........அகிலத்தில் உயர்ந்தீரே’’

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.