மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுப்பிரமணியம் மாணிக்கவாசகம்
வயது 659 அக்டோபர், 1940 – 28 டிசம்பர், 2005
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை ஊரிக்காடு
- வாழ்ந்த இடம்
- Trichy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபாலசுப்பிரமணியம் மாணிக்கவாசகம்:
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் மாணிக்கவாசகம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
கமலவேணியம்மா பாலசுப்பிரமணியம்:
யாழ். வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும், திருச்சி சீனிவாசநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலவேணியம்மா பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது வாழ்வின் எமது உயிர் தெய்வங்களே! உங்களது பிரிவால் எமது இதயங்கள் அனுதினம் வாடுவதோடு சிரிப்பு என்ற உணர்வு அற்றே போய்விட்டது.
கடல் கடந்து வாழ்ந்த போதும் தொலைபேசியூடாக தொடர்பு எடுத்து ’’I Love You’’ சொல் அம்மா என கேட்பேன். நீங்களும் உள்ளன்போடு கூறுவீர்கள், அச்சொற்கள் என்னை இயக்கும் ஒருவித மந்திர சக்தி அம்மா. இப்போது அம் மந்திர சக்தி தரும் வார்த்தைகளுக்காக ஏங்கித் தவிக்கின்றேன் அம்மா. ஓராண்டு கழிந்த போதும் அவ்வுரையாடல் இன்று போன்றே உணர்கின்றேன் அம்மா. தங்களை என்னோடு கனடாவில் சேர்ந்து வாழ முயற்சிகள் செய்தபோதும் காலத்தின் சதி கைகூடாமல் போய்விட்டது ஏனோ?
உங்களது பிரிவுத்துயரில் எமது குடும்பத்திற்கு மட்டுமானதல்ல, உங்களது நல்ல கொடைகொண்ட உள்ளத்தால் பலரை பலநாடுகளில் வாழவைத்து இன்னும் சிலர் உங்களது உதவிக்கரம் எதிர்பார்த்தவேலை உங்களது இழப்பு எல்லோருக்கும் பேரிழப்பாகும்.
எமது வாழ்வில் பல செல்வங்களையோ திரவியங்களையோ தேடினாலும் அவையாவும் உங்களுக்கு ஈடிணையாகது தாயே.
கட்டியணைத்த அன்புக் கரங்கள்- எங்கே
கண்டு இன்புற்ற கருணை முகம்- எங்கே
கேட்டாருக்கு கொடுக்கும் கொடைகரம்- எங்கே
தினம் தினம் வருவாய் காப்பாய்- தாயே
தினம் தினம் வருவாய் தருவாய்- தந்தையே
உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.
உங்கள பிரிவில் துயரும் குடும்பத்தினர்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

