ஆறுதல்

நன்றி நவிலல்

பாலசுப்பிரமணியம் மனோகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலசுப்பிரமணியம் மனோகரன்

வயது 5021 ஆகஸ்ட், 1968 – 10 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
திருநெல்வேலி
வாழ்ந்த இடம்
சிறுப்பிட்டி, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"

எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில்
அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்து வாழும் பகுதியும்,படித்த மக்களை கொண்டதும்,பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியும்,மரக்கறித்தோட்டம்,வீட்டுத்தோட்டம் என அழகு நிறைந்த திருநெல்வேலியில் 21/Aug/1968 இல் திரு.திருமதி பாலசுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.மனோகரன் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் ரவீந்திரன், மகாதேவி, ரகுநாதன், வசந்தகுமார், ஸ்ரீதரன், மகேஸ்வரன் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் தெல்லிப்பளை திரு.திருமதி பத்மநாதன் புஸ்பலீலா தம்பதிகளின் அன்பு மகள் லோஜனா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஜெனாகரன், கேளினி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் மோகன் என அழைக்கப்படுவதுடன் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.08.2019 இல் 50 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

”திருநெல்வேலி மண்ணின் திருப் புதல்வனே
வரும் பகை அனைத்தையும் வாழ்வில் வென்று
கருத்தாக பேசி கடமை செய்து
வருந்தி அழ பிரிந்து சென்றீரே”

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.