மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் பாலசுப்பிரமணியம்
வயது 651 அக்டோபர், 1953 – 15 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கண்டாவளை
- வாழ்ந்த இடம்
- வரணி, இடைக்குறிச்சி, கனடா, அமெரிக்கா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணியைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், இடைக்குறிச்சி, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னம்பலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சிதம்பரநாதர், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மருமகனும்,
உமையம்மா(இடைக்குறிச்சி, வரணி) அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷா(லண்டன்), துனுந்திகா, அனோஷினி, நிவாஷினி, சங்கீர்த்தனா, சங்கீர்த்தனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பூரணசுவாமிநாதன், மங்கையர்திலகம், ரவிக்குமார், ஞானகுமாரி, ரதிகுமாரி, ரவீந்திரன், விஜயகுமாரி, நவகுமார், தாசகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வேலாயுதம்பிள்ளை, சிற்றம்பலம், கந்தராசா, மீனாட்சிப்பிள்ளை, வேதநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுரதன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அஸ்வின் அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-08-2019 திங்கட்கிழமை பிற்பகல், மற்றும் 27-08-2019 செவ்வாய்க்கிழமை காலை ஆகிய தினங்களில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் வவுனியா இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
கண்டாவளையில் 01.10.1953 இல் பொன்னம்பலம் சின்னப்பிள்ளையின் மூத்த புதல்வனாக பிறந்து, எல்லோரும் மூத்ததம்பி என்று பெயர் வைத்து உங்களை அழைக்க வைத்தீர்.
சின்ன வயதில் இருந்து தந்தைக்கு உதவி செய்வதிலும், சகோதர சகோதரிகளுக்கு பாசமிகு அண்ணணாகவும் இருந்தீர்கள்.
முழுக் கதையையும் வாசிக்க
உமையம்மாவின் பாசமிகு கணவராகவும் இருந்தீர்.
உங்களது சகோதர, சகோதரிகளின் மூத்த அண்ணா அழைக்கும் பெருமையை பெற்றீர்களே.
தனுஷா, துனுந்திகா, அனோஷினி, நிவாஷினி, சங்கீர்த்தனா, சங்கீர்த்தனன் ஆகியப் பிள்ளைகளை உலகிற்கு அறிய வைத்தீர்.
அன்பே உருவான எங்கள் அப்பா எங்களை பார்க்க வருவீர்கள் என்று நாங்கள் எதிர்ப்பார்த்திருக்க நீங்கள் ஏன் எங்களை ஏமாற்றி சென்றீர்கள்.
பிள்ளைகளில் இரண்டு பிள்ளைகள் படித்து முடியட்டும் நான் ஊருக்கு போகிறேன் என்று ஏக்கத்துடன் அமெரிக்காவில் இருந்தீரே
அமெரிக்காவில் நண்பர்களுடன் அன்பாகவும், பண்போடும் அவர்களை சிரிக்க வைத்து நல்ல நண்பனாக இருந்தீரே
வைத்தியசாலைக்கு போகும் போது பேரப்பிள்ளை அஸ்வினை பார்த்த சந்தோசத்தில் சென்றீர்களே
கனவுகள் எல்லாம் கலைந்து போனதோ
எங்களை கனவுகள் வாட்டுகின்றதே
எப்போ வருவீர்கள் என்ற ஏக்கம் வர வைத்தீர்கள்
எங்கே சென்றீர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

