மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுப்ரமணியம் சிவபாக்கியம்
வயது 7017 பிப்ரவரி, 1949 – 24 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் சிவபாக்கியம் அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மபிரியா, ஶ்ரீபிரியா, சுகந்தப்பிரியா(கனடா), ரமேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதியழகன், சுஜீவன், சிவகாந்தன்(கனடா), வினோஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கண்ணம்மா(கனடா), தர்மவதி(சுவிஸ்), தனலட்சுமி(கனடா), அம்பிகாவதி(கனடா), பிரபா(கனடா), மகாலட்சுமி(சுவிஸ்), வசந்தகுமார்(சுவிஸ்), சண்முகராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தம்பையா, இராசரத்தினம், பொன்னுத்துரை, கனகசபை மற்றும் செல்லையா, சண்முகராஜா, இலங்கைநாதன், சரோஜினிதேவி, கிருபானந்தன், ஜெயலலிதா, வசந்தராணி, காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, ராஜலட்சுமி, நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிரூபி, சுஜிவன், நிரோஜி, நேஹா, நேமிகா, நிஷா, ஹரணி, ஹரி, கௌசிக் ஆதிஷ், ஜித்தேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷாருக் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
தன்னை அறிந்த அனைவராலும் “தையக்கார பாக்கியம்” என அன்போடு அழைக்கப்படும் பாலசுப்ரமணியம் சிவபாக்கியம் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
உலகின் மூத்த மொழியாம் தமிழ்மொழி, அத்தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட மக்கள் மிகுந்து வாழும் யாழ்ப்பாணம் புங்குடுதீவு 07ம் வட்டாரத்தில் இராசையா சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளாக சிவபாக்கியம் அவர்கள் 17/FEB/1949ஆம் ஆண்டு பிறந்தார். தனது சகோதரங்களான கண்ணம்மா, தர்மவதி, தனலட்சுமி, அம்பிகாவதி, பிரபா, மகாலட்சுமி, வசந்தகுமார், சண்முகராஜா போன்றவர்களுடன் ஓடி ஆடி குறும்புகள் செய்து வளர்ந்த இவர், தனது பள்ளி வாழ்க்கையை தனது ஊரிலேயே படித்து முடித்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
குடும்பச்சூழல் காரணமாக தங்களது சுற்றுவட்டாரத்தின் தொழிலான தையற்த்தொழிலை செய்யத் தொடங்கிய இவர், அனைவராலும் பாசமாக ”தையக்கார பாக்கியம்” என அன்போடு அழைக்கப்பட்டார். திருமண வயதை எட்டியதும் சின்னத்தம்பி பர்வதம் தம்பதிகளின் அன்பு மகனான பாலசுப்பிரமணியம் அவர்களை மணமுடித்து, இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்த இவர் பத்மபிரியா, ஸ்ரீபிரியா, சுகந்தப்பிரியா, ரமேஷ் எனும் பிள்ளைகளைப் பெற்று நற்பண்புகளை போதித்து வளர்த்தார்.
1990கால கட்டங்களில் சுவிஸிற்க்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்து வாழத்தொடங்கிய இவர், அங்கும் வீட்டிலிருந்தபடியே தையல் பணியை செய்து வந்தார். தனது பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை துணைகளாக மதியழகன், சுஜீவன், சிவகாந்தன், வினோஷா போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து, நிரூபி, நிரோஜி, நேஹா, நேமிகா, நிஷா, ஹரணி, ஹரி, கௌசிக், ஆதிஷ், ஜித்தேஷ் போன்ற பேரப்பிள்ளைகளுடனும்,ஷாருக் எனும் அழகிய பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
தனது கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார் என அனைவரோடும் பாசத்தை பொழிந்து இன்பமாக பேசும் இவர், அழகாக பாடல்களை பாடுபவர். புத்தகங்கள் படிப்பதை தனது பொழுதுபோக்காக கொண்ட இவர், அரசியல் பற்றி பேசுவதில் அதிக ஆர்வம் கொண்டு அதனைப்பற்றி தனதுஉற்றாரிடம் அடிக்கடி விவாதிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
பாசம், நேசம், அன்பு, உதவி என இவற்றை மட்டுமே தனது பாசத்திற்குரிய அனைவருக்கும் கொடுக்கத்தெரிந்த இவருக்கு, தனது பிரிவு எனும் கொடுமருந்தையும் வழங்கி அவர்களை விட்டு 24.09.2019 இல் தனது 70 வயதில் விண்ணுலகம் விரைந்தார்.
“உம் கையணைப்பில் நன்னெறி ஊட்டி
உம் வியர்வையால் எமை உயர்த்தி
வாழ வைத்த எங்கள் அன்பு அம்மா
பூவுக்கு வாசம் தந்த தாயே
பூவுலகை விட்டு விண்ணுலகம் விரைந்ததேனோ
உன் பாச உறவுகள் இங்கு தானே இருக்கின்றோம்
எப்படியம்மா உன்னால் எங்களை விட்டு போகமுடிந்தது”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

