அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலேந்திரநாதன் சுபேஸ்
வயது 3521 ஜூன், 1983 – 4 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Milton Keynes ஜ வசிப்பிடமாகவும் கொண்ட பாலேந்திரநாதன் சுபேஸ் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் கனகம்மா(கோப்பாய்) தம்பதிகள் மற்றும் சின்னையா வைராத்தை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பாலேந்திரநாதன் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு ஏக புதல்வரும்,
சுகந்தினி அவர்களின் அன்புச் சகோதரரும்,
உமாகாந்தன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
அபிஷேக், அபிவர்ஷா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரவெட்டி துன்னாலை தெற்கு வீரக்களி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கரவெட்டியில் 21-06-1983 இல் பாலேந்திரநாதன் நாகரத்தினம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் சுபேஸ் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் சுகந்தினி எனும் உடன் பிறப்புடன் கூடி குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனான். குடும்பத்தில் பொறுப்பு மிகுந்த இவர் தனது சகோதரிக்கு திருமணம் முடித்து வைக்க எண்ணி பெற்றோருடன் இணைந்து அல்லும் பகலும் கஸ்ரப்பட்டு உமாகாந்தன் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து, அபிசேக், அபிவர்ஷா போன்ற அழகிய பிள்ளைகளுக்கு மாமா ஆகி பொறுப்பாக அன்புடன் பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார். குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04-04-2019 இல் 35 வயதில் பிரித்தானியாவில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"கரவெட்டி மகனே
கலங்கா உருவேஅழகிய வதனம்
அன்பு உள்ளம்புன்னகை முகம்
பூவிழிப் பார்வை
இளமையில் உயிரைப் பறித்து
இறைவன் தப்புச் செய்தானே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

