ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பேணடின் அந்தோனி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பேணடின் அந்தோனி

வயது 5523 டிசம்பர், 1963 – 15 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
சுண்டுக்குழி
வாழ்ந்த இடம்
மெல்போன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ் சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பேணடின் அந்தோனி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
(லூக்கா 23:43)

அம்மாவிற்கு நிகர் அன்னை !
அன்னைக்கு நிகர் தாய் !
தாய்க்கு நிகர் அம்மா !
உலக ஒட்டுமொத்த ஆராய்ச்சி
மையம் இன்று வரை தோற்றுக் கொண்டே
இருக்கிறது உன்
அன்பிற்கு ஈடாய்
என்ன இருக்குமென்று ....

மீண்டும் உன்
கருவறைக்குள்
எனக்கோர்
இடம் கிடைக்குமா?....

மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனின்
பாதத்தில் கண்ணீர் மலர்களை வைக்கின்றேன்..

உங்கள் பிரிவால் வாடும் கணவர், பிள்ளைகள்.

— டேவிட் அந்தோனி(கணவர்)

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகியதும், அருகில் உள்ளதும், மக்கள் செறிந்து வாழும் இடமும், படித்த மக்கள் அதிகம் வாழும் இடமான அழகு நிறைந்த சுண்டுக்குழியில் 23-12-1963 இல் அன்ரன் சாள்ஸ் வின்சன்ற் பிலோமினா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக பேணடின் அந்தோனி அழகிய குழந்தையாக அவதரித்தார்.

அன்பும், பண்பும் நிறைந்த இவர் அலன் டேவிட் எனும் உடன் பிறப்புடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் மன்னார் அடம்பன் கபிரியேல் அந்தோனி சவிரியாச்சி தம்பதிகளின் அழகு மகனான டேவிட் அந்தோனி என்பவரைத் திருமணம் முடித்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து, கொட்பிறி டிலன் எனும் அன்பு நிறைந்த பிள்ளையை பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் பொறுமைசாலியாகவும், அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார். குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன், இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார்.

கடைசி காலங்களில் டிவியில் படங்கள்,பாடல்கள் விரும்பி பார்த்து மகிழ்ந்தார்.

இவ்வாறு கணவன், பிள்ளை என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 15-04-2019 திங்கட்கிழமை அன்று 55 வயதில் அவுஸ்திரேலியாவில் இயற்கை மரணம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அழகிய வதனம்
அன்பு உருவம்
பண்பு வார்த்தைகள்
பாச விழிகள்
சிரித்துப் பேசும்
சிந்தனை மனமே
அழகிய வதனம் காணாது
அழுது புலம்புகிறோம்."

பிற அறிவித்தல்கள்

  1. 19 ஏப்ரல், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.