2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூபாலன் கமலாகரன்
வயது 4211 செப்டம்பர், 1965 – 5 நவம்பர், 2007
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுன்னாகம் கச்ச நாவலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் தற்போது சுவிஸ் லுகானோ மாநகரில் வசித்து வந்தவரும் மற்றும் கனடாவில் மறைந்தவருமாகிய பூபாலன் கமலாகரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு நிறைந்தவரே! என் உயிரே!!
இனியவரே!!! பாசமுள்ள அப்பாவே! ஆலமரம்
போல் நாம் வேரூன்றும் வேளையில் உங்கள்
உயிரைக் குடித்து எங்களை ஆழ்கடலில்
தள்ளினான் அந்த படுபாவி காலனவன் உங்கள் வரவை
ஆசையுடன் காத்திருந்து இரண்டு
ஆண்டுகள் கடந்தவிட்டது அப்பா
எங்களையும் அம்மாவையும் விட்டு எப்படி
இறுதி உறக்கம் கொண்டீர்கள்?
என் உயிரே! இனியவனே! காதலனே! நண்பனாய்
தாயாய் சகோதரனாய் எமை தாங்கினால் எனக்கு
வேறு உலகமே வேண்டாம் நீ மட்டும் போதும்
என்று நினைத்து வாழ்ந்தேன். உனக்குள் உறைகின்றேன்
மூச்சு முட்டுதடா உன் நினைவி்ல்.
எல்லோரும் சொல்கின்றார்கள் யோசிக்க வேண்டாம்
என்று யோசிக்கவில்லை மறுபடியும் எம்மிடம்
வந்துவிடுங்கள் இல்லையெனில் விரைவிலே எம்மை
அழைத்து விடுங்கள் உங்கள் இடத்தில்
குருவிக் கூட்டைப்போல் இருந்த எங்கள் வீடு
உங்களை இழந்ததில்லை வாய் மலர்ந்து பேசுகின்ற
முத்துப்பல் சிரிப்பழகா உன் புன்னகையில்
ஒரு கோடி புதுமைகள் நான் கண்டேன்
உன்போல் யாரும் இல்லை அத்தான்
இப்பூமிதனில் வாய்மலர்ந்து சிரித்துக் கதைப்பதற்கு
உணவு கூட கசக்கிறது நீங்கள் போகும்போது
உன்னுடனேயே எடுத்துச் சென்றுவிட்டாய் அறுசுவையும்
அப்பாவே பாசம் நிறைந்த உங்கள் மகளும்(அபியும்)
மகன்(சகியும்) இங்கு துடிக்கின்றோம்
கண்ணின் மணிபோல் எமை காத்ததென்ன
காலமெல்லாம் எமை சுமந்திட தானே!
பாதியில் எமைவிட்டு எங்கு சென்றீர்கள் அப்பா
ஈரேழு ஜென்மங்கள் நாம் எடுத்தாலும் எமை
தாங்கிடுங்கள் அப்பா!!!
கண்ணீர் என்றால் எதற்கு? சிந்துவது
எதற்கென்று நாம் இப்போது கண்ணீர் சிந்துவது
சரிதானா? என் இனியவனே! கொள்ளையழகுடன்
இறுதி பயணம் எடுத்துச்சென்று வீ்ட்டீர்கள் ஏன்?
எமக்கு இந்த கொடுந்தீர்ப்பு ஏன் இந்த பிரிவு
என்னவரே! விதிதான் எம்முடன் விளையாடியதா
யார்வந்து பதில் சொல்வார்கள் நீங்கள் எமக்குள்ளேயே
உறைந்து கொண்டு மெளனமாக இருப்பது சரிதானா?
அழுகின்றேன், அழுகின்றோம் அமைதியில்லாமல் அழுகின்றோம்
உங்கள் நினைவுகளுடன் எங்களின் நாட்களை எண்ணி
உங்கள் நினைவுகளுடன் என்று அமைதியாய் அழுகின்றோம்
உங்களின் ஆத்மா சாந்திக்கு ஆண்டவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி...... ஓம் சாந்தி...... ஓம் சாந்தி......
— உங்களின் பிரியமுள்ள மனைவி மதனிகா, பிள்ளைகள் அபிஷா, சகிதன் மற்றும் உறவினர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

