மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கபிரியேல் யோசப் அன்ரன்
வயது 7110 நவம்பர், 1947 – 23 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- New Malden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியேல் யோசப் அன்ரன் அவர்கள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியேல் யோசேப்(நகைக் கடை யோசப்) திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவலிங்கம் அம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராதா அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஸ்மன், பீஸ்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற லுர்த்துமலர், ராஜேஸ்வரி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அடைக்கலராணி, அன்ரன் பத்மராஜா(லண்டன்), காலஞ்சென்ற மேசிடெயிசி, கொன்சலாற்றா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யேசுதாசன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவராஜா, உமா(லண்டன்), கிறிஸ்தோப்பர்(யாழ்ப்பாணம்), சிங்கராயர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கல்யாணி, தேவகி, ராமமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், எப்போதும் பரபரப்பான நகரமாகவும் உள்ள யாழ்ப்பாணத்தில்10-11-1947 இல் நகைக்கடை யோசப் என அழைக்கப்படும் கபிரியேல் யோசேப் திரேசம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் அன்ரன் அவர்கள் லுர்த்துமலர், ராஜேஸ்வரி, அடைக்கலராணி, அன்ரன் பத்மராஜா, மேசிடெயிசி, கொன்சலாற்றா ஆகிய உடன் பிறப்புடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து வைக்க எண்ணிய பெற்றோர் சிவலிங்கம் அம்பிகை தம்பதிகளின் அழகுப் பெண்ணான ராதா அவர்களைத் திருமணம் முடித்து வைத்தனர், இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக லக்ஸ்மன், பீஸ்மன் போன்ற அழகுப் பிள்ளைகளை பெற்று அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார். இவர் வெளிநாடு சென்று கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவ்வாறு மனைவி, பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 23.04.2019 இல் 71 வயதில் பிரித்தானியாவில் உள்ள New malden நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
"அன்பு அப்பா
......அழகிய உருவே
அன்பு மனமே
......அறிவு உள்ளமே
உங்கள் மனம்
.....வாசனை மலர்பிரிந்து சென்று"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

