ஆறுதல்

மரண அறிவித்தல்

கபிரியேற்பிள்ளை றொபேட் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கபிரியேற்பிள்ளை றொபேட்

வயது 732 நவம்பர், 1946 – 7 நவம்பர், 2019

பிறந்த இடம்
சின்னக்குளம்
வாழ்ந்த இடம்
சின்னக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா செட்டிகுளம் சின்னக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கபிரியேற்பிள்ளை றொபேட் அவர்கள் 07-11-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், துரைராசா விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லிங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

டெஸ்மன் றோய்(கனடா), ஜோன்சன் றோய்(லண்டன்), காலஞ்சென்ற கென்ஸ்மென் றோய், றொபின்சன் றோய்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனற் அனுஷா(கனடா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

லில்லிமேரி ஜோர்ஜ் அந்தோனிப்பிள்ளை, நளினா, ராணி, காலஞ்சென்றவர்களான சரசு, ஜோர்ஜ் மற்றும் பிரபு(கனடா), சேகர், ஞானி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராசா, செல்லா(பிரான்ஸ்), டொனி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பராணி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்ஜனா, சஜிந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று செட்டிகுளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொன்மையாக வாழ்வதுடன் குளங்கள் நிறைந்த பகுதியும் காடுகள் சூழ்ந்த பிரதேசமாகக் கானப்படும் வவுனியா செட்டிக்குளத்தில் 02/NOV/1946 ஆம் ஆண்டில் திரு.திருமதி துரைராசா விக்டோரியா தம்பதிகளுக்கு அழகு மகனாக திரு.கபிரியேற்பிள்ளை றொபேட் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் லில்லிமேரி ஜோர்ஜ் அந்தோனிப்பிள்ளை, நளினா, ராணி, சரசு, ஜோர்ஜ், பிரபு, சேகர், ஞானி, ராசா, செல்லா, டொனி எனும் அன்பு உடன்பிறப்புடன் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன்,திரு.திருமதி தம்பையா தங்கம்மா தம்பதிகளின் அழகிய பெண்ணான லிங்கேஸ்வரி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததன் பயனாக டெஸ்மன் றோய், ஜோன்சன் றோய், கென்ஸ்மென் றோய், றொபின்சன் றோய் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து அனற் அனுஷா என்பவரைத் திருமணம் முடித்து வைத்து சர்ஜனா,ச ஜிந் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 07.11.2019 இல் 73 வயதில் வவுனியாவில் உள்ள செட்டிக்குளம் நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்

மீசை மனிதனே மீட்டிய வீணையே
ஆசை உறவே அன்பு மனமே
காசை உழைத்து எங்களுக்குத் தந்த
கருணை உறவே கலங்கா உள்ளம்
அருமை மனதுடன் அன்பாய் வாழ்ந்து
பிரிந்து சென்றதேன் எமை விட்டு.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.