நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திராதேவி புண்ணியானந்தம்
வயது 6127 செப்டம்பர், 1958 – 21 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திராதேவி புண்ணியானந்தம் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மறைவுச் செய்திகேட்டு, எங்களின் இல்லங்களுக்கு வருகை தந்து, எமது துயரில் பங்கு கொண்டவர்களுக்கும், தொலைப்பேசி, மின்னஞ்சல் வழியாக அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதி நிகழ்வுகளில் பங்குபற்றி அஞ்சலி செலுத்தியோருக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவர்களின் அந்தியேட்டி கிரியை 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையியில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் கோண்டாவில் நெட்டிலிப்பாயில் 27/SEP/1958 ஆம் ஆண்டில் திரு.திருமதி பொன்னுச்சாமி யோகம்மா தம்பதிகளின் அழகுக் குழந்தையாக சந்திராதேவி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சற்குணலீலாவதி, மகேஸ்வரன், சரோஜினிதேவி, லட்சுமிதேவி, சகுந்தலாதேவி, ஜெமிலாதேவி போன்ற சகோதரங்களுடன் கூடி ஒன்றுபட்டு வளர்ந்து பெரியவளாகியதும், திரு.திருமதி மயில்வாகனம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகன் புண்ணியானந்தம் எனும் வீரம் நிறைந்த ஆண் மகனை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் வாழ்க்கைப் பயணத்தில் வம்ச விருத்தியாக புவிதரன், பரணிதரன், கங்காதரன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, அவர்கள் பெரியவர்களானதும் தமயந்தி, கிருஷா போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து, அக்ஷயா எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
சுவையான உணவுகள் செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும் விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 21.10.2019 இல் 61 வயதில் கோண்டாவிலில் மரணம் அடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

