ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லம்மா கார்த்திகேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லம்மா கார்த்திகேசு

முன்னாள் ஆசிரியை யாழ். இராமநாதன் கல்லூரி

வயது 9531 ஜனவரி, 1924 – 27 அக்டோபர், 2019

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா கார்த்திகேசு அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

சுகுணன்(Rochester, NY, USA), தயாளன்(Winnipeg/Ajax Ontario), காலஞ்சென்ற குணாளன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவாஜினி, அனுஷ்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்லையா(Malaysia- Boh Tea Plantation) அவர்களின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வ.கந்தசாமி(நடேஸ்வரா கல்லூரி முன்னாள் அதிபர்), சரஸ்வதி பொன்னம்பலம், விசாலாட்சி கணேசன், சுந்தரராணி செல்லையா(Cameron Highlands- Malaysia) ஆகியோரின் அருமை மைத்துனியும்,

கணேஷ்(ஜெசிக்கா), வினோத், ஷார்லினி(அன்ரு), அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் யாழ். இராமநாதன் கல்லூரியின் இன்னாள், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் அளவெட்டியில் 31/JAN/1924 இல் திரு.திருமதி கணபதிப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளுக்கு அன்பு மகளாக செல்லம்மா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் செல்லையா எனும் சகோதரருடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அழகு மகன் கார்த்திகேசு எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர்களின் வாழ்க்கைப் பயனாக சுகுணன், தயாளன், குணாளன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்துவரும் போது எதிர்பாராத விதமாக குணாளன் எனும் அருமை மகனின் பிரிவை தாங்க முடியாது நித்தம் தவித்து வந்தது மட்டுமல்லாது மற்றைய பிள்ளைகளுக்கு சிவாஜினி, அனுஷ்யா என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து கணேஷ்(ஜெசிக்கா), வினோத், ஷார்லினி(அன்ரு), அபிராமி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் நன்கு படித்த இவர் யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி ஆசிரியையாக திகழ்ந்து ஓய்வு பெற்றதுடன் வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும், அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 27.10.2019 இல் 95 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார்.

தாயே எங்கள் தலையே
தாமரை முகமே காயே கனியே கரும்பே
தேன் மழையேதலை கோதும் அன்னையே
தவிக்கிறோம் தினம்
நோய் வரும் போது நொந்த உயிரே
தந்தை அன்பையும் கலந்து தந்த உள்ளமே
எங்கே போனீர் எம் விட்டு

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.