ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வத்துரை பஞ்சாட்சரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வத்துரை பஞ்சாட்சரம்

பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப்பாடசாலை மாணவியும், ஆசிரியையும்

வயது 924 மே, 1928 – 14 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
 துன்னாலை தெற்கு
வாழ்ந்த இடம்
திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மன்னார், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலை தெற்கு கொற்றை உடையார் பகுதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மன்னார், கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட செல்வத்துரை பஞ்சாட்சரம் அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று துன்னாலையில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம்(வைத்தியர்) பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வத்துரை(Customs Officer) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வகுமாரன்(தொழில்நுட்பவியலாளர்– Electro and Mech. Engineering- நோர்வே), காலஞ்சென்றவர்களான கோபாலகுமாரன்(பிரதம சிறாப்பர்), சிவகுமாரன் மற்றும் நந்தகுமாரன்(வங்கி முகாமையாளர்- NSB), பஞ்சகுமாரன்(முன்னாள் பேராதனை வளாக பொறியியல் பீட விரிவுரையாளர்- Consulting Civil and Structural Engineer, அவுஸ்திரேலியா), பவளராணி(ஆசிரியை- திரு இருதய கல்லூரி கரவெட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுலோசனாதேவி, பத்மா, நாமகள், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, துரைச்சாமி(பிரதம தபாலதிபர்), இராசையா(கூட்டுறவு பரிசோதகர், சட்ட விரிவுரையாளர், நீதவான், ACCD- Asst. Commissioner of co. op Department) மற்றும் வீரசிங்கம்(பதிவாளர்- நீதிமன்றம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்னகுமாரன், இறைகுமாரன், கரப்பிரியா, தேனிக்கா, தர்மிக்கா, இலக்கியா, தமன்யா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

நாவேந்தன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிட்டிது இந்து மயானதில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ். துன்னாலை தெற்கு கொற்ற உடையார் குடும்பத்தினைப் பிறப்பிடமாகவும், நெல்வயல், பனை, தென்னை, பலா, வாழை ஆகிய வளங்களிற்கு உரித்துடைய சின்னையா- பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளாக 04-05-1928 இல் வந்துதிதார்.

அன்பும், பண்பும் நிறைந்த இவர் சரஸ்வதி, துரைச்சாமி, இராசையா, வீரசிங்கம் ஆகிய உடன் பிறப்புகளுடன் பிறந்த இவர் பருத்துத்துறை மெதடிஸ் உயர் தரப்பாடசாலையில் கல்வி கற்று அதே பாடசாலையில் ஆசிரியையும் ஆனார். மாணவர்கள், உற்றார், உறவினர், சுற்றத்தார், அயலவர்களுடன் அன்பாக இருந்ததினால் அவரை இன்றும் பஞ்சாட்சர அக்கா என அழைப்பார்கள்.

முழுக் கதையையும் வாசிக்க

பெற்றோர் சம்மதத்துடன் மாமன் வல்லிபுரம்(வைத்தியர்) பத்தினி தம்பதிகளின் மகன் செல்வத்துரை என்பவரை திருமணம் முடித்து கணவனுடன் சென்றார் இதனால் தன் ஆசிரியை தொழிலை விட வேண்டி ஏற்பட்டது.

கணவன் அரச தொழில் காரணமாக 2 வருடத்திற்கு ஒருமுறை இடம் மாறி போகும் போது அவர்களுடன் கூட திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மன்னார், கொழும்பு ஆகிய இடங்களில் சந்தோசமாக வாழ்ந்த காலத்தில் செல்வகுமாரன், கோபாலகுமாரன், சிவகுமார்ன், நந்தகுமாரன், பஞ்சகுமாரன், பவளராணி ஆகிய பிள்ளைகளைப் பெற்று வெவ்வேறு துறைகளில் அறிவூட்டி வளர்த்து விட்டார்.

உடையார் குடும்பத்தினர்கு என குளக்கட்டு நுணுவில் பிள்ளையார் கோவிலில் 5ம் திருவிழா உள்ளது, மற்றையோர் உதவி இல்லாமல் போக இவரே தனித்து செய்து வந்துள்ளார். போர்ச்சூழல் காரணமாக மூத்த, கடைசி மகன் ஆகிய இரண்டு பேரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது.

பின்னர் எல்லோரிற்கும் திருமணம் செய்து வைத்து மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 14-09-2020 இல் 92 வது வயதில் இயற்கை எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 13 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.