நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா ஜோதிரவி
பிரித்தானியா, முன்னாள் ஆசிரியர்- Hartley College பருத்தித்துறை
வயது 8316 அக்டோபர், 1935 – 11 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், பல நாடுகளில் இருந்தும் நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில் 16/OCT/1935 இல் தலைமை ஆசிரியர் - Klang மலேசியா V.K சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகன் ஜோதிரவி அவர்கள் தவரவி எனும் உடன்பிறப்புடன் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும்,திரு திருமதி வடிவேலு தெய்வானை தம்பதிகளின் மகளும் விக்னேஸ்வராக் கல்லூரி ஆசிரியருமான ரதிதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து ரவிச்சந்திரிக்கா, ரவிஸ்காந்தன், ராதிகா, ரவிஷங்கர் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து Dr.நவரட்ணராஜா, ரகுராமன் போன்றவரை திருமணம் முடித்து வைத்து அஹல்யா, நவாணி, ஜனனி, அமாணி, டென்சில், லீறோய், சாயித்ரி போன்ற அழகும் அறிவும் நிறைந்த பேரப்பிள்ளைகளுடன் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.
மேலும் பருத்தித்துறை Hartley college ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்டதுடன் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உடன்பிறப்புகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 11.09.2019 இல் 83 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
“காட்லியின் மைந்தனே கடவுளின் உருவே
வீட்டில் அன்பும் சேவையில் கண்டிப்பும்
கை நீட்டி வழங்கிய கருனை உறவே
காட்டினீர் அன்பை கனியும் மனமாக
வாட்டி வதைக்கிறது உங்கள் பிரிவு”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

