1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்தோப்பர் அன்ரன் ஜெயகுமார்
வயது 454 ஏப்ரல், 1970 – 14 மார்ச், 2016
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- Grindsted
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grintstet ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்தோப்பர் அன்ரன் ஜெயகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததப்பா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்தனீர் காயவில்லையே!
எம்முயிரான எங்களப்பாவே!
தினம்தினம் உங்கள் நினைவில் துடிக்கின்றதே எங்களுள்ளம்
எங்கள் அருமை அப்பாவே!
நூலறுந்த பட்டமதாய் தவிக்கிறோமே உங்கள் நினைப்பில்
கண்களில் எம்மை சுமந்தீர்கள் கணப்பொழுதில்
எம்மை விட்டு கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உங்களைப்போல் யார்வருவார் எம்துயரம்போக்க?
எண்ணிப் பதைக்கின்றோம் விண்ணைத்தான் தேடுகின்றோம்
விண்ணில்வரும் நட்ஷத்திரங்களுக்குள் உங்கள் முகம் தெரியுமென்று
பிராத்தனையில் சொன்ன நினைவு நெஞ்சில்வந்து என்செய்வோம் அப்பா?
ஆண்டவர் சோதனை இதுவென்றால்!
நாட்டுமக்கள் போற்றும் நல்ல மனிதராய்
நல்ல நண்பர்களைக் கொண்ட நல்ல நண்பனாய் வாழ்ந்தீர்
அந்த இதயங்களையெல்லாம் நொருக்கி சிதறவிட்டு...
எங்களையெல்லாம் கண்ணீர் கடலில் மூழ்கவிட்டு எங்குசென்றீர் அப்பா?
தேடுகின்றோம் தேடுகின்றோம் தேடிக்களைத்து விட்டோம்
ஆண்டவரிடம் மன்றாடி உங்கள் ஆத்மா சாந்திபெற வேண்டுகின்றோம்
இவ்வண்ணம் ஆறாத்துயரில் கண்ணீர்வழிய தினம் தினம்
உங்களுக்காய் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

