மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்ரி கைடிப்பொங்கலன் அந்தோனிப்பிள்ளை
வயது 7127 ஜனவரி, 1948 – 2 ஜூன், 2019
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- Waltrop
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Waltrop ஐ வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரி கைடிப்பொங்கலன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மேரிலூர்து(தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மாசில்லா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனிற்ரா, ஜெறி, ஜெவ்றி, யூகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யூலியன், யூலியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மரியநாயகம், காலஞ்சென்ற றொபேட், மற்றும் பற்றிமாமலர், அருமைநாயகம், அரியமலர்(கனடா), அரியநாயகம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரிதிரேசா, மேரிஸ்ரெவா, அலெக்ஸ்(பிரித்தானியா), மேரின், அனுமேரி, றெக்ஸ், யோஸ்சி, பெலிசியா, லெனுட் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனீவ்வா, யோஷவீன், யுஸ்ருஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,படித்த மக்களை கொண்டதும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த கரம்பனில் 27/JAN/1948 ஆம் ஆண்டில் அந்தோனிப்பிள்ளை மேரிலூர்து தம்பதிகளுக்கு அன்பு மகனாக கிறிஸ்ரி கைடிப்பொங்கலன் அவர்கள் மரியநாயகம், றொபேட், பற்றிமாமலர், அருமைநாயகம், அரியமலர், அரியநாயகம் எனும் அன்பு உடன் பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் செபஸ்ரியாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகள் மாசில்லா என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து ஜெனிற்ரா, ஜெறி, ஜெவ்றி, யூகன் போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, பெரியவர்களானதும் யூலியன், யூலியா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்பாகச் செய்து ஜெனீவ்வா, யோஷவீன், யுஸ்ருஸ் போன்ற பேரப்பிள்ளைகளுடன் அன்பாக பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கியதுடன், பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார். இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 02.06.2019 இல் 71 வயதில் ஜேர்மனியில் உள்ள Waltrop நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கரம்பன் தந்த
......காவல் தெய்வமே
அருமைக் குணமே
......அன்புக் கடலே
நிரம்பி வழியும்
........புன்னகை முகமே
சிறுமை மனமானோம்
......உமைப் பிரிந்து
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

