ஆறுதல்

மரண அறிவித்தல்

கிறிஸ்டி ராஜ்குமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிறிஸ்டி ராஜ்குமார்

வயது 5126 அக்டோபர், 1969 – 21 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
மிருசுவில்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ், Edmonton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா Edmonton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்டி ராஜ்குமார் அவர்கள் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கிறிஸ்டி, A.J.L. ராஜமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

அனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,

எமிலி, ஜோஸி, மரினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற எமில் ஜோய் பிரேம்குமார், சுமாஜினி துரைராஜா, காலஞ்சென்ற சுரேஸ்குமார், விஜயதர்ஷினி இளம்பருதி, டியானி செல்வரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜனா, ப்ரீத்தா, கபிக்‌ஷன், நிதர்ஷன், ஜனனி, வினுஷன், நெல்சன், நந்தன், வனோ, ஜினோ, ஜதுஷன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எழுதிட வார்த்தை இல்லை
அழுதழுது ஓய்ந்தன கண்கள்!

ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் போல் ஆகிடுமா

வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்
உன் வாழ்வு தொடங்கும் முன்
நீ எங்கே சென்றாய் தனியே

எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைந்து போனதய்யா
உந்தன் அழகான
புன்னகை முகத்தை தொலைத்து விட்டு
அமைதியற்று வாழ்கிறோமே

காலங்கள் எத்தனை கடந்து போனாலும்
உன் பிரிவிலிருந்து மீண்டு வருவதற்கு
இந்த ஜென்மமல்ல எந்த ஜென்மமும் போதாதய்யா

என்றும் உன் பிரிவால்
துயருறும் குடும்பத்தினர்....

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.