ஆறுதல்

நன்றி நவிலல்

கிறிஸ்ரிஅன்ரன் அந்தோனிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிறிஸ்ரிஅன்ரன் அந்தோனிப்பிள்ளை

வயது 6331 ஜூலை, 1956 – 29 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
ஜேர்மனி, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இலங்கையில் அழகிய இடமும்,படித்த மக்களை கொண்டதும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தில் 31/JUL/1956 ஆம் ஆண்டில் திரு.திருமதி சந்தியாகு அந்தோனிப்பிள்ளை சிசிலியாதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.கிறிஸ்ரி அன்ரன் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் ஸ்பிரித் ஜோண், ஸ்பிரித்தம்மா, பிரான்சிஸ், யுகறிஸ்ரா, கிறிஸ்ரா போன்ற உடன்பிறப்புகளுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி கிபிரியேல் அந்திரேஸ் பிரான்சிஸ் அம்மா தம்பதிகளின் அன்பு மகள் புஷ்பா கிறிஸ்ரி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து பஸ்ரன் கிறிஸ்ரி, செசில் கிறிஸ்ரி எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஜொஹானா கிறிஸ்ரி என்பவரை திருமணம் முடித்து வைத்து றெஜின் ஸ்பிரித் ஜோணை தொட்டமகனாக ஏற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் கடின உழைப்பாளியான இவர் ஜேர்மனியில் சிலகாலம் வாழ்ந்ததுடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 29.09.2019 இல் 63 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

“அன்பு மனமே அனைவர் விரும்பியே
இன்பம் கொடுத்து இன்னல் தீர்த்த
தந்தை உறவே தலை மகனே
உந்தன் நினைவைச் சுமந்து
உள்ளம் உருகி விம்மி அழுகிறோம்”

பிற அறிவித்தல்கள்

  1. 1 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.