மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா சண்முகலிங்கம்
B.S.C(Dip in Edu), PGC in Edu-(U.K), SLEAS, ஓய்வுபெற்ற விரிவுரையாளர் பாலாலி ஆசிரியர் கலாசாலை
5 மே, 2019
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- சுதுமலை, மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மத்தி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சண்முகலிங்கம் அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், K.S சுப்பிரமணியம் (K.S.S- யாழ் இந்துக் கல்லூரி) பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணபாக்கியம்(ஓய்வு நிலை ஆசிரியை- யாழ் இந்து மகளிர் கல்லூரி, யாழ் இராமநாதன் கல்லூரி, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
வசந்தி, சுகந்தி, ஜெயந்தி, சிறீதயாளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிச்சந்திரன், காலஞ்சென்ற செந்திவாசன்(சேனன்), சுமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகேஸ்வரி, மகேஸ்வரி, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தையல்நாயகி, காலஞ்சென்றவர்களான கந்தையா, நடேசபிள்ளை, சியாமளாதேவி, பரராஜசேகரம், நரேந்திரன், சிறீதரன் மற்றும் மகேஸ்வரி, மனோரஞ்சிதம்(ரஞ்சி), சந்திரோதயம்(சந்திரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திசைவீரசிங்கம், காலஞ்சென்றவர்களான இராமநாதன், நடனசபாபதி(சபா), நாகராஜேஸ்வரி மற்றும் கலாநிதி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,
மயூரி, நிஷி, அஷ்வினி, அனுஜன், ஆரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2019 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,கல்வி அறிவு நிறைந்த மக்களைக் கொண்டதும் நெல்வயல்களும்,மிளகாய்செடிகளும் வெங்காய வயல்களும்,மரக்கறித் தோட்டங்களும்,பழவகைகள்,பயன்தரு மரங்கள் என செழிப்பு மிகுந்த திருநெல்வேலியில் சின்னையா இலட்சுமி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் சண்முகலிங்கம் அவர்கள் கந்தையா, நாகேஸ்வரி, மகேஸ்வரி, ஆறுமுகம் ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் K.s சுப்பிரமணியம் பூமணி தம்பதிகளின் அன்பு மகள் குணபாக்கியம் அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வசந்தி, சுகந்தி, ஜெயந்தி, சிறீதயாளன் எனும் அழகுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததுடன் ரவிச்சந்திரன், செந்திவாசன், சுமி ஆகியவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்புடன் செய்ததுடன், மயூரி, நிஷி, அஷ்வினி, அனுஜன், ஆரன் ஆகிய பேரப்பிள்ளைகளை அணைத்து மகிழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நன்றாக படித்ததுடன் B.s.c(Dip in Edu),PGC in Edu (u.k), SLEAS பட்டங்களை முடித்து உயர்நிலை அடைந்ததுடன்,பலாலி ஆசிரிய கலாசாலையில் சேவையாற்றி ஓய்வு நிலை அடைந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார், இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05.05.2019 இல் சுதுமலை மத்தி மானிப்பாயில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"கல்வியில் சிறந்த
...........கலங்கரை விளக்கு
காலனின் வலையில்
...........அகப்பட்ட உறவு
நேர்மைக் குணம் கொண்ட
.......... நேர் சிந்தனையாளர்
நெஞ்சு வலிக்க
......... கலங்கி அழுகிறோம்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

