ஆறுதல்

நன்றி நவிலல்

சிதம்பரப்பிள்ளை திரவியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிதம்பரப்பிள்ளை திரவியம்

தபால் உத்தியோகத்தர் GOP- யாழ்ப்பாணம்

வயது 8228 அக்டோபர், 1936 – 21 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதரம்பரம்பிள்ளை திரவியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

பாசத்துடனே எங்களை
அருகணைத்து அரவணைத்து
பண்பையும் அன்பையும்
பொறுமையுடன் எடுத்துரைத்து
நல் ஆசானாய் நல்லறிவு புகட்டி
சோதனைகளை சாதனைகளாக
வாழ்ந்து காட்டி
இனிதே வாழும் அழகிய வாழ்வில்
அடக்கி ஆளும் அகந்தையை விடுத்து
அடங்கி ஒடுங்கும் அச்சத்தையும் தவிர்த்து
குடும்பம் குடும்பம் என ஓடாய் தேய்ந்து
கடவுள் கொடுத்த வரம் நீதானப்பா
அப்பா உங்கள் இறப்பிற்கு
பின் இழப்பதற்கு எதுவுமில்லை
தன்னம்பிக்கை தந்த நீங்கள் - இன்று
எங்களுடன் இல்லை
விட்டு விட்டு துடிக்கும் எம் இதயத்தில்
என்றென்றும் உங்கள் நினனவுகளுடன்

அன்னாரின் மறைவுச்செய்திகேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும் சமூகவலைதளங்கள் ஊடாகவும் எம்மைத் தொடர்புகொண்டு அனுதாபங்களை பகிர்ந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

— மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

வாழ்க்கை வரலாறு

"THE PERFECT MAN" என பெயரெடுத்த சிதம்பரப்பிள்ளை திரவியம் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் அரியாலையில் 28/OCT/1936 இல் சிதம்பரப்பிள்ளை மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மகனாக பிறந்த திரவியம் அவர்கள் திருச்செல்வம், திருவருட்செல்வம், துரைசிங்கம், லீலா, சுசிலா போன்ற தனது சகோதரங்களுடன் ஓடி ஆடி விளையாடிகுறும்புகள் பல செய்து வளர்ந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

பள்ளி வாழ்க்கையை தனது பிறந்த ஊரான அரியாலையில் முடித்த இவர், யாழ்ப்பாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து, மின்துறை சார்ந்த பொறியாளராக வேலையில் சேர்ந்து,பிறகு தபால் உத்தியோகத்தராக பணிபுரிய தொடங்கினார்.
தனது இளமைக்காலத்தில் இராசாத்திஅம்மா அவர்களோடு ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரோடு காதல் புரிந்து, அவரை திருமணம் முடித்து இல்லற வாழ்வை மகிழ்ச்சியாகவாழ்ந்ததன் காரணமாக ரவீந்திரன், சத்தியபாமா, கௌசலா, சுபத்ரா, வரலக்சுமி, குணசீலன், பதினி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று, நற்பண்புகளை போதித்து வளர்த்து,நல்லமுறையில் படிக்கவைத்து, சுகிர்தா, லோகேந்திரன், சுரேந்திரன், செல்வகுமார், யோகேஸ்வரி, ஜெகந் போன்ற நல்ல வாழ்க்கைத் துணைகளை தேர்ந்தெடுத்து, திருமணம் முடித்து வைத்தார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகு வீட்டிலிருந்தபடியே புத்தகங்களை படிப்பது, தினசரி நாளிதழ்களை வாசிப்பது என்பதனை தனது வாடிக்கையாக கொண்ட இவர், நேரந்தவராமையை தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றிவந்தார்.
தனது பேரப்பிள்ளைகளோடு கொஞ்சிப்பேசி அதிக நேரத்தை செலவிட்டு வந்த இவர், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரோடும் பாசமாக பழகி வந்தார்.

வாழ்வில் நேர்மையான மனதின் என பெயரெடுத்த இவர், தனது பாசத்திற்குரிய அனைவரையும் தவிக்கவிட்டுவிட்டு 21.09.2019 இல் தனது 82 வயதில் நல்லூரில் காலமானார்.

”அன்புத் தெய்வமே
எங்கள் பாசமிகு தந்தையே
எந்நாளும் எல்லோருக்கும்
அன்பானவராகவும் நல்வழிகாட்டியாகவும்
எல்லோர் உள்ளங்களிலும் நீங்காது
ஒளி வீசும் எங்கள் அப்பாவே
அன்புடை நெஞ்சங்கள் சிந்தனை இழந்து
என்புருக ஏங்கிட்டு பார்க்க
எம்மை துன்பிடை வைத்து தியரிலே மூழ்கி
பன்முகன் காலனோடு சென்றதேனோ”

பிற அறிவித்தல்கள்

  1. 23 செப்டம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.