மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம்
வயது 712 மே, 1948 – 21 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லய்யா, மேரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அரியரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
லீனா லூட்ஸ்(சாந்தி), கமல்ராஜ்(ராஜூ), மனோஜ், மரீனா சுகந்தி, காலஞ்சென்ற யூட் மரியோஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரான்சிஸ் சேவியர்(இலங்கை), காலஞ்சென்ற திரேசம்மா(சறோ), Dr. யேசுதாசன்(லண்டன்), லூயிஸ் கொன்ஸால்வே(பாலன்- இலங்கை), மேரி ராஜேஸ்வரி(ராஜி- கனடா), தோமஸ் ரெஜி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லூயிஸ் புனிதராஜ், ராஜி, சுதாகரன், அஞ்சலா(ரதி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிறில், சில்வெஸ்ரர், சாந்தி, சந்திரன், அஞ்சலா, மலர், சிவகுமார், றோசாறி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஒலிவியா, சால்ரன், நயோமி, கெவின், அன்தலீன், ரஜின்ஸ்ரன், ஜொயல், ஜெருசா, ஜெறோன், அபிஷா, ரெவோம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த ஊர்காவற்துறை கரம்பொனில் 02/MAY/1948 இல் திரு.திருமதி மரியாம்பிள்ளை, சொர்ணம் தம்பதிகளுக்கு அன்பு மகளாக டெய்ஸி அன்னமலர் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பிரான்சிஸ் சேவியர்,திரேசம்மா, Dr. யேசுதாசன், லூயிஸ் கொன்ஸால்வே, மேரி ராஜேஸ்வரி, தோமஸ் ரெஜி எனும் சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு திருமதி செல்லய்யா, மேரியம்மா தம்பதிகளின் அழகு மகன் அரியரட்ணம் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர்களின் வாழ்க்கைப் பயனாக லீனா லூட்ஸ்(சாந்தி), கமல்ராஜ்(ராஜூ), மனோஜ், மரீனா சுகந்தி, யூட் மரியோஜ் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்தனர் பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் லூயிஸ் புனிதராஜ், ராஜி, சுதாகரன், அஞ்சலா(ரதி) என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து ஒலிவியா, சால்ரன், நயோமி, கெவின், அன்தலீன், ரஜின்ஸ்ரன், ஜொயல், ஜெருசா, ஜெறோன், அபிஷா, ரெவோம் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். மேலும் வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும், அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார்.
இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 21.11.2019 இல் 71 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார்.
கருனை ஒளியே கலங்கா விழியே
வறுமையின் போதும் வாடாத மலரே
பெருமை கொள்ளாப் பெருங் கிளியே
அருமை மனம் ஒன்று அனைவரையும் பிரிந்து
நெடுந் தூரம் சென்றதேன்
நினைவுடன் வாழுகிறோம் எங்கள் குல விளக்கே.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

