மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரியாம்பிள்ளை டேவிட் பாலசிங்கம்
20 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- ஈச்சமோட்டை
- வாழ்ந்த இடம்
- England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Langley Slough ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை டேவிட் பாலசிங்கம் அவர்கள் 20-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மேரிபிள்ளை செல்லம்மா(அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து(கந்தையா) மேரி அன்ரோனியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி(இளைப்பாறிய ஆசிரியை- யாழ். டொன்பொஸ்கோ வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜக்குலின் துஷ்யந்தி, பிறஸ் ஜெரால்ட் நிஷாங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிசிலியா நேசம், இம்மானுவல் நவரட்ணம், றாஜநாயகம், எட்வட் செல்வரட்ணம், அருளானந்தம் அரசறெட்ணம், திரேசா அந்தோனிப்பிள்ளை, மற்றும் ஜேம்ஸ் ராஜசிங்கம்(இலங்கை), லூட்ஸ் மேரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான றாஜரட்ணம், திருமதி. மரியமுத்து இம்மானுவேல்(இளைப்பாறிய ஆசிரியை- பாசையூர் அந்தோனியார் பாடசாலை), சறோஜினி ராஜசிங்கம், குணநாயகம், மற்றும் ஜெசி செல்வறெட்ணம்(கனடா), மரியம்மா செல்லம்மா(அச்சுவேலி), காலஞ்சென்றவர்களான மேரி திரேசா, ஜெற்றூட்(இளைப்பாறிய ஆசிரியர்), ஞானப்பிரகாசம், மற்றும் சற்குணம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வணக்கத்துக்குரிய பிதா வேதநாயகம்(அச்சுவேலி) அவர்களின் அன்பு மருமகனும்,
ஜோசப் விக்னறாஜா, காயத்திரி நிஷாங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்ரனி, கவின், கேற்லின், ஹரோல்ட், ஹெய்லின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

