நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன்
வயது 5627 ஏப்ரல், 1960 – 10 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- பெரியதம்பனை, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, சுவிஸ் Laufen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
கண்ணிறைந்த நீரோடு
உம் கனவு சுமந்த நெஞ்சோடு
இரத்தக் கண்ணீர் வடித்துத் தேடுகின்றோம்
எங்கு சென்றாய்?
மனைவி மனம் பரிதவிக்க
பிள்ளைகள் சோர்ந்து நிற்க
உற்ற உறவும் உறைந்து நிற்க
எம்மை மறந்து எங்கு போனீர்?
உம்மோடு வாழ்ந்த காலமெல்லாம்
நினைவு கொண்டு நம்
காலம் முடியும் வரை வாழ்ந்திடுவோம்
உயிருக்கும் மேலானவரே உம் நினைவோடு
நீர் மறைந்து போனபின்பும்
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து பேராறாய்
பெருகுதய்யா மடைதிறந்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
என்றென்றும் உங்கள் நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
அன்பு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்.
அன்னாரின் மரணச் செய்தி கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி மூலம் எங்கள் துக்கத்தில் பங்குகொண்டவர்களுக்கும், இறுதிச்சடங்கில் தோல் கொடுத்த அனைத்து உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது ஆத்மா சாந்தி பிரார்த்தனை 10-09-2016 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் Hirschen Restaurant, Baselstrasse 10, 4242 Laufen, Switzerland எனும் முகவரியில் நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

