ஆறுதல்

மரண அறிவித்தல்

கலாநிதி  C.C.  அமிர்தாஞ்சலி சிவபாலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கலாநிதி C.C. அமிர்தாஞ்சலி சிவபாலன்

வயது 5918 ஆகஸ்ட், 1959 – 22 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். 234 பிரதான வீதியை வதிவிடமாகவும் கொண்ட கலாநிதி திருமதி சிசீலியா கார்மலீன் அமிர்தாஞ்சலி சிவபாலன் அவர்கள் 22-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மாகிறற் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கலாநிதி நாகலிங்கம் சிவபாலன்(சிரேஷ்ட விரிவுரையாளர், இரசாயனத் துறை, யாழ். பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வநித்திலன்(சிரேஷ்ட விரிவுரையாளர், NSBM கிறீன் பல்கலைக்கழகம், ஹோமாகம), சுமித்திரேயி(கொழும்பு பல்கலைக்கழக மாணவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அருள்தந்தை ஜெராட் சவரிமுத்து(யாழ். மறைமாவட்டம்), கலாநிதி தர்மன் சவரிமுத்து(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஆன்ம சாந்தி வேண்டியதான திருப்பலி யாழ். புனித அடைக்கலமாதா ஆலயத்தில் 24-04-2019 புதன்கிழமை அன்று 03:00 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்பட்டபின், புனித கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையில் அழகிய இடமும், தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசமும் நெல்வயல்களும், மிளகாய்செடிகளும் வெங்காய வயல்களும், மரக்கறித் தோட்டங்களும் பழவகைகள், பயன்தரு மரங்கள் என செழிப்பு மிகு யாழ்ப்பாணத்தில் 18-08-1959 ஆம் ஆண்டில் சவரிமுத்து மாகிறற் தம்பதிகளுக்கு அழகிய குழந்தையாக சிசீலியா கார்மலீன் அமிர்தாஞ்சலி அவர்கள் இவ் ஊரில் அவதரித்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் அருட்தந்தை ஜெராட் சவரிமுத்து(யாழ்.மறை மாவட்டம்)கலாநிதி தர்மன் சவரிமுத்து(அவுஸ்திரேலியா) போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் நாகலிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அழகு ஆண் மகனான யாழ்/பல்கலைக்கழக சிரேஷ்ட இரசாயனத்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகலிங்கம் சிவபாலன் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து செல்வநித்திலன் (சிரேஷ்ட விரிவுரையாளர் NSBM கிறீன் பல்கலைக்கழகம் றோமாகம) சுமித்திரேயி(கொழும்பு பல்கலைக்கழக மாணவி) எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் ஆசிரியையாகப் பணி செய்ததுடன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன் பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 22.04.2019 இல் 59 வயதில் யாழ்ப்பாணம் 234 பிரதான வீதியில் உள்ள தனது வீட்டில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"கல்வியில் உயர்ந்த
......கலங்கரை விளக்கே
கடவுள் போல்
......இரக்க குணமே
சுயநலம் அற்ற
....இரக்க உருவே
உம்மைப் பிரிந்து
.....உருகும் உறவுகள்"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.