மரண அறிவித்தல்

ஈஸ்வரி வல்லிபுரம்
வயது 88
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி வல்லிபுரம் அவர்கள் 28-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
லண்டனில் வசிக்கும் விஜயராகவன், ரஞ்சனி நந்தகோபால், கனடாவில் வசிக்கும் விஜயலட்சுமி ஞானசேகரம், ஞானச்சந்திரன், உமா காந்தன், மனோகரன், ஜெயந்தி சரவணபவான்(நியூசிலாந்து), காலஞ்சென்ற குமரேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சசிதேவி, சுமண, நளினி, சுகந்தி, சரவணபவான், நந்தகோபால் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வத்சலா விஜயகுமார், ஞானமோகன், கிருஷ்யா, சாந்தி மயூரன், அரவிந்தன், காயத்திரி ஸ்கொட், யதுஸா, கோபிகா,ராஜதுரை, சுஜீவன், கார்த்திக், சரண்யா, லக்ஸ்மன், வர்மன், அர்ஜீன், ரஜீந்தன், நிவேதிகா, கீதனன், நவீதா, சோபனா, அக்ஸ்ரன், அபிநயா, அகிலன், அகிம்சா, ஆனந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரவீன், அஞ்சனா, சந்தோஷ், ஷசன், ஜெனிபர், டிலன், டெனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளதும், மக்கள் செறிந்து வாழும் பகுதியும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நல்லூர் கல்வியங்காட்டில் 17/SEP/1930 ஆம் ஆண்டில் ஈஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும், அழகு நிறைந்த ஆண் மகனான வல்லிபுரம் சபாரத்தினம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து விஜயராகவன், ரஞ்சனி, விஜயலட்சுமி, ஞானச்சந்திரன், உமாகாந்தன், மனோகரன், ஜெயந்தி, குமரேசன் போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் சசிதேவி, சுமண, நளினி, சுகந்தி, ஞானசேகரம், சரவணபவான், நந்தகோபால் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்புறச் செய்ததுடன் பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 28.05.2019 இல் 88 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்பில் சிறந்த
.......அழகு மலரே
அனைத்தையும் மறந்து
.......பண்பு காட்டி
பக்குவமாய் வளர்த்த
.....பாச உறவே
காலம் உள்ளவரை
....... மறக்காத உருவே "
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

