நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
எட்னா மரியா ஜோசப் D ஜெயம்
வயது 6125 மே, 1958 – 18 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், மேலும் பல வழிகளிலும் எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலமாகவும், வேறு வழிகளிலும் எம்மை தொடர்பு கொண்டு அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் அஞ்சலி பிரசுரங்களை வெளியிட்டு தங்கள் உள்ளத் துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் எமக்கு ஆறுதல் தந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
எப்போதும் இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்த எட்னா மரியா வாழ்க்கை வரலாறு இதோ....
இயற்கை எழில் மிகுந்த இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும் வீரம் மிகுந்த மக்களும் எழுச்சி மிகு சமுதாயமாகவும் விளங்கும் குருநகரில் 25/MAY/1958 இல் திரு.திருமதி சிலுவைதாசன் கிறிக்ஷடினா தம்பதிகளின் அன்பு கொண்ட மகளாய் எட்னா மரியா அவர்கள் ரவீந்திரா, எரிக்வோல்டர், ஜெரிநித்தியேந்திரா, பற்றிமா எனும் சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி ஜோசப் மரியநாயகி தம்பதிகளின் அன்பு மகனான ஜோசப் D ஜெயம் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக தமயந்தி, துஷ்யந்தினி, ஜெயப்பிரதீபன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து முத்துக்குமரன், மேர்வின், டெய்ஷி போன்றோரை திருமணம் முடித்து வைத்து ஐரின், ஐவன்ஞோசப், இஷபல், இவானா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 18.09.2019 இல் 61 வயதில் இந்தியாவில் உள்ள Chennai நகரில் இயற்கை மரணம் அடைந்தார்.
குருநகர் மண்ணின் குழந்தை மனமே
வருகை தந்து எப்போதும் வாழ்த்தும்
அருமை உறவே அன்பின் மலையே
கருத்துக் கூறி கவர்ந்து இழுக்கும்
கருணை உறவே கலங்கி அழுகிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

