ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏகாம்பரம் சண்முகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஏகாம்பரம் சண்முகலிங்கம்

முன்னாள் உரிமையாளர்- Top Lines Convenience ஸ்தாபனம்

வயது 594 அக்டோபர், 1956 – 25 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் சண்முகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அவர் தந்தை தன் தாய்க்குத் தங்க மகன்
இவர் தம் தாய்க்குத் தங்கத் தலைமகன் - எங்கள்
குடும்பங்கள் தழைத்தோங்க வந்த மாதலைவன்
தன் தாரத்திற்கும் தன் செல்வங்களுக்குமோர் வழிகாட்டி

சந்ததிக்கு ஓர் ஆலயம்போல் - எங்கள்
குடும்பத்தின் கோயில் அன்றோ
கோபுரத்தை பார்த்து கும்பிட்டோம் - இன்று
எங்கள் குடும்பமே உங்களை கோபுரமாக வணங்குகிறோம்.

விழுதுகள் பல ஊன்றி விழாது நின்ற ஆலமரம் - இன்று
விழுதுகள் அறுந்து ஆணிவேரோடு சாய்ந்தது ஏன்?
மார்க்கண்டேயருக்கு பதினாறு அகவை என்றால்- இப்
பூவுலக புனிதனுக்கு ஏன் அறுபது புரியவில்லையே!

நேர்மையும், தியாகமும், மனிதமும் உங்களிடம் இருந்தும்
யமனையும் வெல்வீர்கள் என நினைத்தோம் ஆனால்
காலனுக்கு ஏது தர்மம், எங்கள் ஆண்டவனை ஏன் வதம் செய்தாய்
எங்கள் தெய்வத்திற்கே மேதினியில் மருந்தில்லை என்றாயே!

எங்கள் வேதனைகள் யாவும் சோதனையாக மாறியதே
ஐந்து வயதில் தந்தையின் வலக்கரம் பிடித்தாய்!
பத்து வயதில் பக்குவமாய் துலாகயிறு பிடித்தாய்!
பதின்ம வயதில் பல்லறிவோடு துணிந்து பல தோட்டங்கள் செய்தாய்!

கட்டிளம் காளைப்பருவத்தில் அழகையும் மகிழ்ச்சியையும் அள்ளித்தந்தாய்
எங்கள் கலட்டி வீடும்சரி, கனடாவிலும் சரி அமுதசுரபியாய் அள்ளி இறைத்தாய்
பூமிக்கு சூரியனும் சந்திரனும் போல எங்களுக்காய்
துன்பமில்லா வாழ்வை அள்ளித்தந்தாயே
எங்கு சென்றீர் ஏன் எங்களை பிரிந்தீர்!

எப்பொழுதும் உங்கள் கண் பார்க்க கை செய்யும்
காது கேட்கும் முன்னர் கை நிறைய கொடுப்பவரே
பட்ட மரம்கூட தளிர்விடும் - உங்கள்
பார்வை பட்டால் கூட பாவமெல்லாம் பறந்துவிடும்

உற்றாரை உறவினரை உபசரிப்பதற்கு ஒர் அப்பூதி அடிகள்

பூமியில் இயற்கை அழகை ரசித்து
பூக்களால் மரங்களால் அழகு பார்த்தவரே
தேரேறிவரும் எங்கள் ஐயனை தினம் நினைத்து மகிழ்ந்தவரே
ஐயனாரின் வருட பொங்கல் விழாவை சிறப்பித்த எம் அண்ணலே

சந்தன மரம் போல, வாசமிகு கற்பூரம்போல கரைந்தது ஏனோ?
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் நீங்கள்
எங்களுக்காய் அன்பையும், அருளையும், பொருளையும் வாரி இறைத்தீர்

தாய்க்குப்பின் தாரமென தன் மனையாளையும்,
தம்மிரு செல்வங்களையும் தாங்கி தூயவனானீர்
தனக்கென வாழா தவப்புதல்வர் நீங்கள்
காலமெல்லாம் கண்ணீர் பூக்களால் அர்ச்சிக்கின்றோம்.

உங்கள் பிரிவுத் துயரை யாரிடம் பகிர்வோம்?
உங்களுக்காய் பாதபூசை செய்து கண்ணீரால் நனைகின்றோம்.

எங்கள் பாசமென்ற வீட்டின் இல்லறத்தின் தலைமகனே
எங்கள் வாழ்விற்கு ஒளியூட்டிய குலவிளக்கே
இது என்ன விதியா ஐயா? ஏனிந்த கொடுமையையா?
முழுநிலவாய் குளிர்முகம் காட்டிய எங்கள் ராசாவே எங்கு சென்றாய்!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கும்
அருமை மனைவி, பிள்ளைகள், பாசமான அம்மா
உன் அன்பில் வாழும் உடன்பிறப்புகள் மற்றும்
மாமி, அத்தான், மைத்துனர்மார், பெறாமக்கள்,
மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 25 ஆகஸ்ட், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 18 செப்டம்பர், 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.