மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
எலிசபெத் ராஜபூவதி ராஜரத்தினம்
வயது 9412 அக்டோபர், 1924 – 26 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- உடுவில், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட எலிசபெத் ராஜபூவதி ராஜரத்தினம் அவர்கள் 26-08-2019 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏழாலையைச் சேர்ந்த திரு. திருமதி W.M. ஜோசுவா தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்ற A.Y. ராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன்(ரவி- அவுஸ்திரேலியா), ரஜினி(தஞ்சி சிறிகரன்- இங்கிலாந்து), தேவேந்திரன்(இந்தி- கனடா), யோகேந்திரன்(ஜோ- அவுஸ்திரேலியா), ஜெயேந்திரன்(ஜெயம்- இங்கிலாந்து), செல்வேந்திரன்(செல்லா- நோர்வே), ஞானேந்திரன்(ஞானா- கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வயலெட் ஆனந்தம், வின்னி ராஜரத்தினம் மற்றும் Dr. W.D. ஜோசுவா, காலஞ்சென்ற யுனிஸ் தர்மசீலன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சாந்தி, காலஞ்சென்ற சிறிகரன், ரூபா, காலஞ்சென்ற பிறீடா, நளி, ரஞ்சி, மனோகரி, சித்திரா ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான K. ஆனந்தம், M.R. ராஜரத்தினம், கொமாண்டர் M.R. தர்மசீலன், மற்றும் ரீட்டா ஜோசுவா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷிரான், ஷெரீன், ஜொனதன், பிரஹான், வித்தியா, வனோ, டிலோஷன் , ஜெரான், வனிதா, சமந்தா, ஷோர்ணா, நிஷான், நிரோகன், நிருபனா, அமிர்தா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சயானா, ஷர்மையா, ஜரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் ஏழாலையில் 12/Oct/1924 இல் திரு.திருமதி W.M ஜோசுவா தம்பதிகளின் அன்பு மகள் எலிசபெத் ராஜபூவதி அவர்கள் வயலெட் ஆனந்தம், வின்னி ராஜரத்தினம், Dr. W.D ஜோசுவா, யுனிஸ் தர்மசீலன் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் A.Y ராஜரத்தினம் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக ரவீந்திரன், ரஜினி, தேவேந்திரன், யோகேந்திரன், ஜெயேந்திரன், செல்வேந்திரன், ஞானேந்திரன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து சாந்தி, சிறிகரன், ரூபா, பிறீடா, நளி, ரஞ்சி, மனோகரி, சித்திரா போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து ஷிரான், ஷெரீன், ஜொனதன், பிரஹான், வித்தியா, வனோ, டிலோஷன், ஜெரான், வனிதா, சமந்தா, ஷோர்ணா, நிஷான், நிரோகன், நிருபனா, அமிர்தா போன்ற பேரப்பிள்ளைகளுடனும் சயானா, ஷர்மையா, ஜரன் எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 26.08.2019 இல் 94 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இயற்கை மரணம் அடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
கண்ணாடி வதனம் ஒன்றை
............ காரிருள் சூழ்ததே
விண் நட்சத்திரம் ஒன்றை
........... சூரிய ஒளி மறைத்ததே
பண்ணிசை பாடிய குயில்
.......... பாதியில் பறந்ததே
கண்கள் கலங்கி அழ
.......... காலத்தால் மறைந்தீரே.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

