ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

எமிலியாம்பிள்ளை எட்வேட் செல்வராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

எமிலியாம்பிள்ளை எட்வேட் செல்வராசா

வயது 7212 ஆகஸ்ட், 1946 – 12 மே, 2019

பிறந்த இடம்
பருத்தித்துறை முனை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை முனை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எமிலியாம்பிள்ளை எட்வேட் செல்வராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஓடிச் சென்றாலும் என்றும் எம்மை விட்டு
நீங்காது உம் நினைவுகள்
ஏங்குகின்றோம் உம்மோடு நாம் வாழ்ந்த
காலங்களை எண்ணியே
கடின உழைப்பாளியாய் கஷ்டங்கள் பல கண்டு
எம்மை வளர்த்த அப்பாவே
பாதி வழியில் எங்களை மறந்து சென்றீரோ உம்
பாசத்திற்க்காய் ஏங்கி நிற்க்கின்றோம் நாங்கள்
எங்களின் உயிர் மூச்சாய் எங்களோடு கூடவே வாழ்ந்து
வந்த அப்பாவே தேடுகின்றோம் தினம் உம்மை

கனவுகள் பல கண்டோம் உம்மை எவ்வாறெல்லாம்
வாழ வைக்க வேண்டுமென்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் காலம் வரும்
முன்பே எம்மை விட்டுச் சென்றதேனோ
நீரே தன் உலகமென வாழ்ந்திருந்த அம்மாவின்
நாட்களெல்லாம் கண்ணீரில் கரைந்தோட
கலங்கி நிற்க்கின்றோம் சொல்வதறியாமல்
உங்கள் பிள்ளைகள் நாம் இங்கு
அம்மாவைத் தேற்ற ஐவர் நாமுள்ளோம் அவளருகில்
ஆனால் எங்களைத் தேற்ற யாருள்ளார் எம்மருகில்
எத்தனை உறவுகள் எம்மைத் தேடி வந்தாலும்
அப்பாவே உமக்கீடாகாது எதுவுமே
உங்கள் ஆசைப் பேரப்பிள்ளைகள் உம்மைத்தேடி கலங்கி நிற்க
அவர்களைத் தேற்ற வழியின்றி தவிக்கின்றோம் நாம்
நீங்கள் நேசித்த உயிருக்குயிரான பேரப்பிள்ளைகளை
தவிக்கவிட்டுச் சென்றீரோ
மறு ஜென்மம் எண்டொன்று உண்டானால்
மறுபடியும் உமக்கு பிள்ளைகளாய் வந்து
பிறக்க வேண்டுகிறோம் இறைவனையே....

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

அமரர் எமிலியாம்பிள்ளை எட்வேட் செல்வராசா(பெரியதம்பி ) வாழ்க்கை வரலாறு

பருத்திமண்ணில் கடலலை தாலாட்ட முனைக்கிராமத்தில் எமிலியாம்பிள்னை செபமாலையம்மா தம்பதிகளின் ஐந்தாவது மகனாய் 12 ஆவணி 1946 ஆம் ஆண்டில் வந்தவதரித்தார் இம்மண்ணில். அன்பும் பாசமும் நிறைந்த இவர், சூசைஏவராணிமுஸ்(இளைப்பாறிய இராணுவ அதிகாரி, ஜேர்மனி), அருளானந்தம்(ஜேர்மனி),காலஞ்சென்ற அவுறாம்பிள்ளை(இலங்கை), பிலோமினா(கனடா), மரியதாஸ்(இலங்கை), டேவிற் அன்ரனி(நியூசிலாந்து), மேரி பிறக்சி பற்றிமா(டென்மார்க்), றூபினா(நியூசிலாந்து), எட்வேட் லோகநாதன்(ஜேர்மனி), அன்னம்மாள்(மன்னார்), யோன் கிளாடியஸ்(கனடா), காலஞ்சென்ற லூமினா, டேவிற் வயாசப்(ஜேர்மனி), ஆகிய உடன் பிறப்புக்களுடனும், றீற்றா(இலங்கை), காலஞ்சென்ற தேவராசா(மல்லி) ஆகிய உடன் பிறவாச் சகோதரர்களுடனும் குறும்புகள் செய்து மெல்ல வளர்ந்து பெரியவனானதும், இம்மனுவேல் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளான சாந்தபிலோமினாவைக் கரம்பிடித்து சாந்திக்கா, சாமிளா, டீயூக் சியாம், காலஞ்சென்ற சாளினி, யாழினி, டீயூக் சியாம் என்னும் அன்பு நிறைந்த பிள்ளைச் செல்வங்களைப் பெற்று கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் குடும்பத்தின் நலனில் அக்கறை கொண்டு பாடுபட்டு உனழத்து வந்தது மட்டுமல்லாது, பொதுப்பணிகளிலும் முழு ஈடுபாட்டுடனும் அக்கறையுடன் முன் நின்று செயல்பட்டு வந்தார். தன்னை நாடி வருவோருக்கு இல்லை என்று சொல்லாது, தன்னாலான உதவிகளைச் செய்து இரக்ககுணம் நினறந்தவராகவும் விளங்கினார். எல்லோருடனும் கலகலப்பாக பழகி வந்த இவர், அதிக நண்பர்களை தன்வசம் கொண்டிருந்தார். அதேவேளை மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மீதும் அளவுக்கு அதிகமாக அன்பு கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வந்தார். இவ்வாறு வாழ்ந்த இவர் 12.05.2019 இல் 72 வயதில் பருத்தித்துறையில் இயற்கை மரணம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திபோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 14 மே, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.