மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன்
யாழ். மறைமாவட்ட மூத்தகுரு அருட்பணியாளர்
வயது 7314 டிசம்பர், 1945 – 11 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன் அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று தனது இவ்வுலகப் பணியை நிறைவுசெய்து இறைவனடி சேர்ந்தார்.
இவர் கிளிநொச்சி ஆரோபணம் இளைஞர் இல்லத்தின் இயக்குனராகவும், யாழ். மனித முன்னேற்ற நடுநிலையத்தின் இயக்குனராகவும், செட்டிகுளம், பூநகரி, முழங்காவில், முல்லைத்தீவு, மாங்குளம், கொய்யாத்தோட்டம் ஆகிய பங்குத் தளங்களில் பங்குத் தந்தையாகவும், யாழ். மறைமாவட்டக் காணிப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அன்னார், சாமிநாதன் குருசாமி பத்திநாதன், சேலின் அன்னரத்தினம் பத்திநாதன் தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
அருட்தந்தையின் திருவுடல் 12-07-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08.00 மணிமுதல் கொழும்பு பொரளையிலுள்ள றேமன்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும், பி.ப 04.30 மணிக்கு அவ்விடத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு யாழ். ஆயர் இல்லச் சிற்றாலயத்தில் 13-07-2019 சனிக்கிழமை தொடக்கம் 15-07-2019 திங்கட்கிழமை மதியம் வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. அதனைத்தொடர்ந்து பி.ப 03.30 மணிக்கு யாழ். ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் பின்னர் யாழ். புனித மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உறவினர்கள், நண்பர்கள், குருக்கள், துறவிகள், பங்குமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் இரத்த சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் காலமானார்.
எல்லாம் வல்ல மூவொரு இறைவனின் திராட்சைத் தோட்டத்தின் நற்பணியாளர்களில் ஒருவராக கடந்த 1970ம் வருடம் ஏப்ரல் 06ல் அருட்தந்தையாகத் திருநிலைப் படுத்தப்பட்டு 2019 ஜூலை 07 வரை அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் அவர்கள் யாழ் மறைமாவட்டத்தில் பல்வேறு பங்குகளில் மாபெரும் பணிகளை மேற்கொண்டவர் என்பதனை அனைவரும் நன்கறிவர்......
முழுக் கதையையும் வாசிக்க
இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் உச்சம் தொட்ட கொடூரங்களில் ஒன்றான வலைஞர் மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் இரத்த சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் இறைபதமடைந்தார் என்ற செய்தி தமிழ் இனத்தை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
1996இல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்கப்பட்டு முல்லைத்தீவு நகரையும் சூழ இருந்த கிராமங்களையும் சேர்ந்த மக்கள் அரசின் உதவிகள் எதுவுமின்றி மீள்குடியமர்ந்து கொண்டிருந்த இடர் மிக்க நாட்களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் முல்லைத்தீவின் பங்குத்தந்தையாக பொறுப்பெடுத்தார் .
உட்கட்டுமானங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் சிங்கள ஏகாதிபதியத்தால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்கும் முகம் கொடுத்துக்கொண்டு மீள்குடியேறிய இம்மக்களுக்கு மதம் கடந்து பல்வேறு மனிதாபிமான பணிகளையும் உதவிகளையும் செய்து அம்மக்களின் நேசிப்பை பெற்றார் .
2004 இல் முல்லைத்தீவை கொடூரமாகத் தாக்கிய சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர் தப்பிய இவர் சுனாமியால் அனைத்தையும் இழந்து போன அம்மக்களிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன.
மதம் கடந்த இவரின் அன்பு செலுத்தல் அனைத்தும் மக்களையும் இவர்பால் ஈர்த்தது .
2009 இல் முள்ளிவாய்க்காலில் தமிழர் இன அழிப்பு உச்சம் தொட்ட நாட்களில் சிங்கள இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட வலைஞர் மடம் தேவாலயத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலில் காயமடைந்து முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் இரத்த சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்தவர் .
தமிழ் மக்களின் விடுதலை போராட்ட வரலாற்றில் தலைமையாலும் தளபதிகளாலும் போராளிகளாலும் நேசிக்கப்பட்ட மகத்தான மனிதம் ஒன்று இன்று எம்மிடையே இல்லை.
வன்னி மண்ணின் புதுக்குடியிருப்பு, மாங்குளம், முல்லைத்தீவு பங்குகளில் அடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியது....
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரின் பல்வேறு அளப்பரிய பணிகளில் வன்னிப் பெரு நிலப்பரப்பில் மேற்கொண்ட முக்கிய பணிகள் சிலவற்றைப் பார்த்தோமானால்.....,
1 - இளம்குருவாக 1970ன் நடுப்பகுதியில் புதுக்குடியிருப்பு பங்குத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் மல்லிகைத்தீவில் புனித வனத்து (கடற்கரை) அந்தோனியார் கோவிலை உருவாக்கியவர்......
2 - இளம்குருவாக 1970ன் நடுப்பகுதியில் புதுக்குடியிருப்பு பங்குத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் இரணைப்பாலையில் புனித பாத்திமா அன்னை ஆலயத்தை நிர்மாணித்தவர்....
3 - கடந்த 1980ன் நடுப்பகுதியில் மாங்குளம் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் பல தமிழ் இளைஞர்களுக்கு உதவி புரிந்ததனால் பாதுகாப்புப் படையினரின் சொல்லொனா நெருக்கடிளுக்கு ஆளாகி உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்....
4 - முல்லைத்தீவுப் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் சுணாமிப் பேரழிவின் போது கடலிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் டிசம்பர் 26ல் திருக்குடும்பத் திருநாட் திருப்பலியை ஒப்புக் கொடுத்து எல்லாம் வல்ல மூவொரு இறைவனின் கருவியாகச் செயற்பட்டதால், முல்லைத்தீவில் தற்போது வசிக்கின்ற பலருடைய உயிரைக் காப்பாற்ற உதவி புரிந்தவர்......
5 - 2014ல் சுனாமிப் பேரழிவால் முல்லைத்தீவில் இறந்துபோன 3000க்கும் மேற்பட்டவர்களது உடலங்களை நல்லடக்கம் செய்யும் பணியில் தன்னுடன் பணியாற்றிய உதவிக் குருக்களது ஒத்துழைப்போடு பெரும் பங்காற்றியவர்......
6 - சுனாமி நினைவு மண்டபம் முல்லைத்தீவில் நிறுவுவதில் பெரும் தொண்டாற்றியவர்......
7 - இறுதி யுத்த காலத்தின் பின்னரும் மாங்குளம் பங்குத் ததையாக மீண்டும் பணியாற்றி அழிந்துபோன வன்னி மண்ணை மீளக் கட்டி எழுப்பும் பணியில் தன்னை அர்ப்பணித்தவர்.....
வன்னி மண்ணை அதிகமதிகமாக நேசித்தவருமான அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பால் துயருறும் அடிகளாரின் சகோதர சகோதரிகள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

