ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

பிரான்சிஸ் இராசநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பிரான்சிஸ் இராசநாயகம்

வயது 825 ஏப்ரல், 1935 – 26 நவம்பர், 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Sarcelles

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரான்சிஸ் இராசநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்

உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்தவரை

உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை...!

சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
முப்பத்தொரு நாட்கள் போனால் என்ன
முப்பதாண்டுகள் கடந்தாலும்- உங்கள்
வாழ்வும் வாக்கும் பயின்றே வாழ்வோம்!

உயிராய், தெய்வமாய், ஒளியாய், தந்தையாய், ஆணிவேராய், அன்பின் உருவமாய் விளங்கிய மதிப்புக்குரிய பிரான்சிஸ் இராசநாயகம் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு எம்மை தேற்றி ஆறுதல் படுத்திய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் சமூகவலையத்தளங்கள் ஊடாகவும், துயரத்தில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகளை காகிதத்திலும், பதாகைகளிலும் அருளிய பெருந்தகைகளுக்கும் இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்தவர்களுக்கும், மலர் தூவி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அஞ்சலி உரை வழங்கியவர்களுக்கும், அபர கிரியைகளைச் சிறப்புற செய்த அருட்தந்தையர்களுக்கும், இம்மலருக்கு நினைவலைகளை அனுப்பியவர்களுக்கும், ஆத்மசாந்தி பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் நாம் குறிப்பிட மறந்து பல வழிகளிலும் எமக்கு உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் பணிவன்புடன் நன்றி நவில்கின்றோம்.

— மனைவி, பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.