ஆறுதல்

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை தேவகுருநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை தேவகுருநாதன்

நல்லூர் மார்க்கட் தம்பிராசா எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்

வயது 7010 டிசம்பர், 1948 – 18 மே, 2019

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர் ஆடியபாதம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தேவகுருநாதன் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பேபிசறோஜா அவர்களின் பாசமிகு கணவரும்,

செங்கோடன்(பிரித்தானியா), அமுதா(ஆசிரியை- கிளி/வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புஸ்பகரணி(பிரித்தானியா), துஷ்யந்தன்(இலங்கை வங்கி, கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முத்துலிங்கம்- ஸ்ரீ, கல்யாணி(கனடா), இராசலிங்கம்- நிர்மலா(அவுஸ்திரேலியா), சண்முகநாதன்- மதிவதனி(கனடா), காலஞ்சென்ற இராசதுரை மற்றும் அன்புச்செல்வி(கனடா), ஜெகதீஸ்வரன்- சந்திரவதனி(அவுஸ்திரேலியா), புவனேஸ்வரி- சண்முகலிங்கம்(அவுஸ்திரேலியா), பாஸ்கரன்- துஷியந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வெண்ணிலா(பிரித்தானியா) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், மக்கள் செறிந்து வாழும் பகுதியும், பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் அருள்பாலிக்கும் இடமும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நல்லூர் ஆடியபாதம் வீதியில் 10/DEC/1948 ஆம் ஆண்டில் கணபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளுக்கு கனிஷ்ட புதல்வனாக தேவகுருநாதன் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சண்முகநாதன், இராமநாதன் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் தம்பிராசா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகள் பேபிசறோஜா என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து செங்கோடன், அமுதா போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்ததுடன்,புஸ்பகரணி, துஷ்யந்தன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன் வெண்ணிலா போன்ற பேரப்பிள்ளையுடன் பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நல்லூர் மார்க்கட் தம்பிராசா எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளராகவும்,இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கினார், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியதுடன், பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைஎன மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 18.05.2019 இல் 70 வயதில் நல்லூரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

நல்லூர் தந்த
......நல்லுள்ளமே
நன்றாக வாழ்ந்து
.......உயர்ந்த செம்மலே
அழகிய உருவே
........ஆண்டவன் மனமே
அன்பை இழந்து
......அழுகிறோம் இப்போது

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.