மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை பழனித்துரை
ஓய்வுபெற்ற மின்சாரசபை ஊழியர்- இலங்கை
வயது 7221 ஆகஸ்ட், 1945 – 2 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- ஈச்சமோட்டை
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பழனித்துரை அவர்கள் 02-09-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரிமளம் அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தகுமார்(பிரித்தானியா), தவக்குமார்(சுவிஸ்), பாலமனோகரன்(பிரித்தானியா), ராகினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பற்குணராசா, பாலசுப்பிரமணியம்(பாலன்), மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சங்கீதா, பிருந்தா, சார்ல்ஸ், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சின்னத்துரை லீலாவதி, அழகரத்தினம் பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவிதா(கனடா), ரஞ்சன்(யாழ்ப்பாணம்), மோகன்(ஜெர்மனி), பவன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஹர்ஷனா, தரணிகா, அருணன், ரக்ஸனா, நிலா, அஸ்னா, அக்ஷா, சாலினி, மதுஷா, கவிஷா, பவிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-09-2017 சனிக்கிழமை அன்று 28,1 வது லேன், சென் .செபஸ்ரியர் லேன், கோவில் புதுக்குளம், வவுனியா எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று 246/2 A, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மறு நாள் 04-09-2017 திங்கட்கிழமை அன்று அதே முகவரியில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

